சீனாவின் ஹூபெய் மாகாணத்தில் உள்ள பட்டாசு விற்பனை நிலையம் ஒன்றில் ஏற்பட்ட பயங்கர வெடிப்பு மற்றும் தீ விபத்தில் 12 பேர் உயிரிழந்துள்ளனர்.
மத்திய சீன நகரமான சியாங்யாங்கில் உள்ள ஒரு சில்லறை விற்பனை கடையில் இன்று இந்த விபத்து நிகழ்ந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வெடிப்பைத் தொடர்ந்து ஏற்பட்ட தீ விபத்தில் சுமார் 50 சதுர மீற்றர் பரப்பளவிலான கடை வளாகம் முற்றிலும் எரிந்து சாம்பலானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
விபத்துக்கான காரணம் குறித்து இதுவரை உத்தியோகபூர்வ தகவல்கள் வெளியாகவில்லை.
இது குறித்து காவல்துறை மற்றும் தீயணைப்புத் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருவதாக ரொய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
