நாடாளுமன்ற ஓய்வூதிய சட்டமூலம் இன்றையதினம் நிறைவேற்றப்பட்டது.
இச் சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு 152 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதற்கு ஆதரவாக 154 வாக்குகளும், எதிராக 2 வாக்குகளும் அளிக்கப்பட்டன.
மேலும் இந்த வாக்களிப்பிலிருந்து எவரும் விலகியிருக்கவில்லை.
குறித்த சட்டமூலம் மீதான மூன்றாம் வாசிப்பு திருத்தங்கள் இன்றி நிறைவேற்றப்பட்டதாக சபாநாயகர் அறிவித்தார்.
