கொழும்பு மாநகர சபை உறுப்பினராக இருந்த மொஹமட் பாத்திமா சொஹாரா புஹாரி தற்போது நீக்கப்பட்டுள்ளார்.
இவர் தேசிய மக்கள் சக்தியின் வரவு – செலவுத் திட்டத்துக்கு ஆதரவாக வாக்களித்தமையால், அவரது கட்சி உறுப்புரிமையை இடைநிறுத்த இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் நடவடிக்கை எடுத்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மொஹமட் பாத்திமா சொஹாரா புஹாரியின் பதவியை இரத்துச் செய்து வர்த்தமானி அறிவித்தல் வெளியிட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
