யாழ்ப்பாணம் கோண்டாவில் – இருபாலை வீதியை சேர்ந்த சிறுவன் ஒருவன் நேற்றையதினம் உயிரிழந்துள்ளார்.
மகிந்தன் லர்மிகன் என்ற 11 வயது சிறுவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
சிறுவன் தொடர்பில் தெரிய வருகையில்,
சிறுவனுக்கு வயிற்றோட்டம் ஏட்பட்டமையால் நேற்றையதினம் அவர் யாழ் போதனா வைத்தியசாலையில் மாலை 5 மணிக்கு அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சிறுவனுக்கு சிகிச்சை அளித்தும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளான்.
சிறுவனுக்கு வயிற்றோட்டம் ஏற்பட்ட வேளை , உடலில் நீர்ச்சத்து குறைந்து கிருமித்தொற்றினால் மரணம் சம்பவித்துள்ளதாக உடற்கூற்று பரிசோதனைகளில் தெரியவந்துள்ளது.
