இந்தோனேசியாவின் மகாசரிலுள்ள சுல்தான் ஹசனூதின் சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்க இருந்த விமானமொன்று மாயமாகியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
குறித்த விமானம் பிற்பகல் 1:17 மணியளவில் கட்டுப்பாட்டு அறையுடனான தொடர்பை இழந்துள்ளமை தெரிய வந்துள்ளது.
இந்த விமானத்தில் 8 ஊழியர்களும் 3 பயணிகளும் பயணித்திருந்ததுடன் மகாசர் விமான நிலையத்திற்கு வடகிழக்கே சுமார் 20 கிலோமீற்றர் தொலைவில் உள்ள லியாங்-லியாங் மலைப்பகுதியில் விமானம் மாயமாகியுள்ளது.
மாயமான இவ்விமானத்தை தேடும் பணிகளில் இந்தோனேசியாவின் தேசிய தேடுதல் மற்றும் மீட்பு முகவரகம் மற்றும் பொலிஸார் ஆகியோர் இணைந்து தேடி வருகின்றனர்.
