கடந்தகால அரசாங்கங்களில் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு ஏராளமான சலுகைகள் வழங்கப்பட்டது.
இதன்படி இந்த சலுகையை குறைக்கும் முயற்சியில் தற்கால அரசாங்கம் ஈடுபட்டுள்ளது . பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான ஓய்வூதிய முறையை இரத்து செய்யும் நோக்கில் சில சட்டமூலங்கள் கொண்டு வரப்படவுள்ளதுடன், அடுத்த 6 வாரங்களுக்குள் அவை நிறைவேற்றப்படும் என அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
