யாழ்ப்பாண விஞ்ஞான சங்கத்தின் சமூக விஞ்ஞானப் பிரிவின் ஏற்பாட்டில் “பேரிடரை எதிர்கொள்ளல் நல்லூரில் வெள்ளம்” என்ற தொனிப் பொருளில் அமைந்த கருத்தமர்வு யாழ்ப்பாணப் பல்கலைக்கழக நூலக கேட்போர் கூடத்தில் நேற்றைய தினம் சனிக்கிழமை நடைபெற்றது.
இந்த நிகழ்வில் “மௌனம் கலைதல்” என்ற செயல்விளக்க நாடக ஆற்றுகையும் இடம்பெற்றது.
அத்துடன் பல்கலக்கழக கல்வியாளர்களும் துறைசார் நிபுணர்களும் கலந்துகொண்ட குழுநிலைக் கருத்தமர்வும் இடம்பெற்றது. .
பேரிடரை எதிர்கொள்ளல் என்ற குழுநிலைக் கருத்தமர்வில், யாழ்ப்பாணப் பல்கலைக்கழக விலங்கியல் துறையின் சிரேஷ்ட விரிவுரையாளர் பேராசிரியர் கணபதி கஜபதி, புவியியல் துறையின் சிரேஷ்ட விரிவுரையாளர்களான கலாநிதி ஏ.அன்ரனிராஜன், கலாநிதி பிரதீபா விபுலன், தேசிய நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபையின் வடக்குக்கான உதவிப் பொது முகாமையாளர் ஏந்திரி. ஏகாம்பரநாதன் ஜெகதீசன், யாழ். மாநகர சபையின் தலைமைப் பொறியியலாளர் ஏந்திரி இராசையா சுரேஸ்குமார், நீர்ப்பாசனப் பொறியியலாளர் ஏந்திரி. குணராஜ் சுஜீவன் மற்றும் நல்லூர் பிரதேச உதவிப் பிரதேச செயலாளர் இராமலிங்கம் சிவகரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
