தம்புத்தேகம, மலியதேவபுர பிரதேசத்தில் காட்டு யானை தாக்கியதில் 48 வயதான நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
தனது வயலுக்குள் நுழையும் காட்டு யானைகளை துரத்துவதற்காக இரண்டு நண்பர்களுடன் வயலுக்கு அருகிலுள்ள வீதியின் அருகில் இருந்தபோதே காட்டு யானையின் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளார்.
யானையிடமிருந்து தப்புவதற்காக குறித்த நபர் வீதியில் ஓடிய போதும் அவரைத் துரத்திச் சென்ற யானை தாக்கியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை தம்புத்தேகம பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
