டிட்வா பேரிடர் காரணமாக கடந்த 28.11.2025 அன்று ஏற்பட்ட வெள்ள அனர்த்தம் காரணமாக கிளிநொச்சி மாவட்டத்தின் ஏ 35 பிரதான வீதியில் 11 ஆம் மைக்கல் பகுதியில் அமைந்துள்ள பிரதான பாலமானது கடும் வெள்ளம் காரணமாக பெரும் பாதிப்பு ஏற்படுத்தியது.
இந்நிலையில் சேதமடைந்த பாலத்தை புனரமைக்கும் பணியில் இந்திய இராணுவம் மற்றும் இலங்கை இராணுவம் வீதி அபிவிருத்தி திணைக்களம் இணைந்து துரித கதியில் புனரமைப்பு பணிகளை இன்றைய தினம் நிறைவு செய்தது.
இதன் போது இன்றைய தினம் இந்திய துணைத் தூதர் சாய் முரளி அவர்கள் கலந்து கொண்டு குறித்த பாலத்தின் புனரமைப்பு பணிகளை பார்வையிட்டார். தற்பொழுது அப்பணி நிறைவு பெற்றுள்ளது. எதிர்வரும் 21 அல்லது 22 திகதிகளில் பொதுமக்கள் பாவனைக்காக கையளிக்கப்பட உள்ளமை குறிப்பிடத்தக்கது.