Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
அண்மைய செய்திகள்இலங்கை

25 ஆயிரம் நிதியுதவி தரவில்லை கிராம சேவையாளர் மீது 16 வயதான மாணவன் முறைப்பாடு!!

டிசம்பர் 10, 2025
படிக்க 2 நிமிடங்கள்
SHARE

பேரிடரின் போது யாழ்ப்பாணத்தில் பாதிக்கப்பட்ட வீட்டிற்கு 25 ஆயிரம் ரூபாய் நிதி உதவி வழங்க மறுத்த கிராம சேவையாளருக்கு எதிராக பாதிக்கப்பட்ட நபர் ஒருவர் மனித உரிமை ஆணைக்குழுவின் யாழ் . பிராந்திய காரியாலயத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.

சண்டிலிப்பாய் பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட கல்லுண்டாய் பகுதியில் உள்ள புதிய வீட்டு திட்டத்தில் வசிக்கும் 16 வயதான மாணவனே முறைப்பாடு செய்துள்ளார்.

தந்தை இல்லாத நிலையில் , தாயுடன் கல்லுண்டாய் புதிய வீட்டு திட்ட வீட்டில் வசித்து வந்த நிலையில் கடந்த மூன்று மாதங்களுக்கு முன்னர் அம்மா வேலை நிமர்த்தமாக கொழும்பில் தங்கியுள்ளார்.

நான் தனியே அந்த வீட்டில் இரவு நேரங்களில் தங்க முடியாததால் , குருநகர் பகுதியில் உள்ள பெரியம்மா வீட்டில் தங்குவேன்.

இந்த நிலையில் மழை ஆரம்பித்தால் எமது வீடு வெள்ளத்தில் மூழ்குவது வழமையானது. அதனால் மழை ஆரம்பித்ததால் , நான் தொடர்ச்சியாக பெரியம்மா வீட்டில் தங்கியிருந்தேன். எமது வீட்டினுள் வெள்ளம் சென்று இருந்தது.

இந்த நிலையில் , பேரிடரால் எமது வீடு வெள்ளத்தில் மூழ்கியதால் , அரசாங்கத்தால் வழங்கப்படும் 25 ஆயிரம் ரூபாய் நிதியுதவிக்காக எமது பகுதி கிராம சேவையாளரிடம் பதிவுகளை மேற்கொள்ள சென்ற வேளை , அவர் எமது பதிவுகளை ஏற்கவில்லை.

வெள்ளம் ஏற்படும் போது , வீட்டில் எவரும் வசிக்கவில்லை. என கூறி எமது பதிவை பதிய மறுத்துள்ளார். ஆனால் எமது அயலவர்கள் சிலரும் வெள்ளம் வருவதற்கு சில நாட்களுக்கு முன்னரே அங்கிருந்து வெளியேறி உறவினர்கள் வீட்டில் தங்கியிருந்தனர். அவர்களுக்கு நிதி உதவி வழங்கப்பட்டுள்ளது. எமது குடும்பத்தை மாத்திரமே கிராம சேவையாளர் திட்டமிட்டு புறக்கணித்துள்ளார்

இது தொடர்பில் அம்மா மேலதிகாரிகளுடன் கதைத்த போதிலும் , வீட்டில் வசிக்க வில்லை என கூறி நிதியுதவி தரவில்லை.

எமக்கு அந்த நிதியுதவியை பெற்று தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றே மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்துள்ளேன் என மாணவன் மேலும் தெரிவித்தான்.

முந்தைய செய்தி ஒரு மில்லியன் ரூபாய் பெறுமதியான மருந்து பொருட்களை கையளித்த மன்னார் மறைமாவட்ட ஆயர்!
அடுத்த செய்தி லலித் குகன் வழக்கு – கோட்டாவின் சத்திய கடதாசியை மன்றில் சமர்ப்பிக்க உத்தரவு(Video)

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
சனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்

எம்மவர் நிகழ்வுகள்

அமர்க்களம் 2026

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்இலங்கை

புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் பிள்ளைகளுக்கான புலமைப்பரிசில்

ஜூலை 4, 2026
இலங்கை

முல்லைத்தீவு மாட்டத்தில் “தூய்மையான இலங்கை” (Clean Sri Lanka) திட்டம் தொடர்பில் கருத்தரங்கு!

பிப்ரவரி 3, 2025
இலங்கை

யாழ் . கோட்டை மற்றும் சங்கிலியன் பூங்காவை அழகுபடுத்த திட்டம்

பிப்ரவரி 3, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

காங்கேசன்துறையில் மரநடுகை நிகழ்வு

டிசம்பர் 9, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?