கிளிநொச்சி கரைச்சி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட மணியங்குளம் கிராமத்திற்கு இரவு வேளைகளில் நுழையும் காட்டு யானைகள் மக்களின் பயன் தரு தென்னை மரங்களை அழித்து வருகின்றன.
நேற்றிரவும் புகுந்த காட்டு யானை 13ற்கு மேற்பட்ட தென்னை மரங்களை அழித்துள்ளது. குறித்த கிராமத்தில் ஒரு மாதத்தில் மாத்திரம் 80ற்கு மேற்பட்ட தென்னைகளை அழித்துள்ளதாக கிராம மக்கள் தெரிவிக்கின்றனர்.
உரிய அதிகாரிகள் யானை வேலி அமைத்து தர வேண்டும் என கோரிக்கை விடுக்கின்றனர்.
