ருஹுணு பல்கலைக்கழகத்தின் மாணவர்கள் இன்று குளவித் தாக்குதலுக்கு உள்ளாகிய நிலையில் இந்ந குழுவில் 6 மாணவர்கள் காயமடைந்து பொகவந்தலாவ பிரதேச வைத்தியசாலையில் சேர்கப்பட்டுள்ளனர்.
பொகவந்தலாவ, மோரா தோட்டத்தில் அமைந்துள்ள பயிர்ச்செய்கை பயிற்சி நிலையத்தில் நடைமுறைப் பயிற்சிப் பட்டறைக்காக சென்றிருந்த மாணவர்கள் மரத்தில் கட்டப்பட்டிருந்த குளவிக்கூட்டை கலைத்தமையால் இந்த தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளனர்.
இந்த நடைமுறைப் பயிற்சிப் பட்டறைக்காக பல பல்கலைக்கழகங்களைச் சேர்ந்த மாணவர்கள் இந்த நாட்களில் தங்கியிருந்து பங்கேற்றி வருகின்றனர்.
