Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
அண்மைய செய்திகள்இலங்கை

நெடுந்தீவில் கைதான இந்திய மீனவர்கள் மூவருக்கு 06 மாத சிறை

நவம்பர் 10, 2025
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

இலங்கை கடற்பரப்பினுள் அத்துமீறி நுழைந்து கடற்தொழிலில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் , மூவருக்கு 06 மாத கட்டாய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டதுடன் , ஏனைய 26 பேருக்கு இரண்டு வருட சிறைத்தண்டனை விதிக்கப்பட்டு , அதனை 06 வருட காலங்களுக்கு மன்று ஒத்திவைத்துள்ளது.

கடந்த சில வாரங்களுக்கு முன்னர் நெடுந்தீவினை அண்டிய கடற்பரப்பினுள் , அது மீறி நுழைந்து கடற்தொழிலில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் இரண்டு படகுகளுடன் 29 பேர் கைது செய்யப்பட்டு , ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றில் முற்படுத்தப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தனர்.

குறித்த வழக்கு இன்றைய தினம் ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட வேளை , 29 பேரையும் குற்றவாளிகளாக மன்று கண்டது.

அதனை அடுத்து , படகோட்டிகள் இருவருக்கும் , படகின் உரிமையாளர் ஒருவருக்குமாக மூவருக்கு 06 மாத கால கட்டாய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.

அதில் படகின் உரிமையாளர் ஒருவர் காணப்பட்டமையால் , அந்த படகினை அரசுடைமையாக்க உத்தரவிட்ட மன்று இரு படகின் உரிமையாளர்களுக்கும் தலா 40 இலட்ச ரூபாய் அபராதமும் விதித்தது. மற்றைய படகின் உரிமையாளர் இல்லாதமையால் , அப்படகின் மீதான வழக்கு விசாரணைக்கு திகதியிடப்பட்டுள்ளது.

அதேவேளை இரு படகில் இருந்த ஏனைய 26 பேருக்கும் எதிராக இரண்டு குற்றச்சாட்டுக்களுக்கு தலா 06 மாத காலமும் மற்றைய குற்றச்சாட்டுக்கு ஒரு வருட கால பகுதியுமாக 2 வருட சிறைத்தண்டனை விதிக்கப்பட்டு 06 வருட காலங்களுக்கு மன்று ஒத்தி வைத்துள்ளது.

அதன் அடிப்படையில் , குறித்த 26 பேரும் எதிர் வரும் 06 வருட கால பகுதிக்குள் மீண்டும் எல்லை தாண்டிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டால் இரண்டு வருட சிறைத்தண்டனையுடன் பிடிபடும் கால பகுதியில் விதிக்கப்படும் சிறைத்தண்டனையையும் சேர்த்து அனுபவிக்க நேரிடும் என்பது குறிப்பிடத்தக்கது.

முந்தைய செய்தி கொன்கார்டியா பல்கலைக்கழகம் எதிர்கொள்ளப்போகும் பாரிய நெருக்கடி குறித்து எச்சரிக்கை!
அடுத்த செய்தி ஏறாவூரில் இரு வாள்களுடன் பெண் ஒருவர் கைது

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
சனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்இலங்கை

யாழில் உணவருந்திய பின்னர் மயங்கி விழுந்த இளைஞன் உயிரிழப்பு!

ஜூன் 18, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

யாழ் மாவட்ட செயலகத்துற்கு விஜயம் செய்த அமைச்சர் குழாம்…

ஏப்ரல் 25, 2025
இலங்கை

பெண் தலைமைத்துவக் குடும்பங்களுக்கான வாழ்வாதார உதவி

ஜனவரி 28, 2026
அண்மைய செய்திகள்இலங்கை

யாழ் நெடுந்தீவில் 4 இந்திய மீனவர்கள் கைது!

ஆகஸ்ட் 6, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?