அநுராதபுரம் – தலாவ வீதியில் இடம்பெற்ற பேருந்து விபத்தில் 6பேர் உயிரிழந்துள்ளதோடு 40 இற்கும் அதிகமானோர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
தம்புத்தேகம, ஜெயகங்கா பகுதியில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது. இந்த விபத்தில் ,உயர்தர பரீட்சைக்கு தோற்றிய மாணவர்களும் இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
காயமடைந்தவர்கள் தம்புத்தேகம மற்றும் தலாவ வைத்தியசாலைகளிள் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
