கிளிநொச்சி அக்கராயான் ஸ்கந்தபுரம் – ஈச்சங்குளம் பகுதியில் இளைஞன் ஒருவர் வெட்டி கொலை செய்யப்பட்டுள்ளார்.
முற்பகை காரணமாக 24 வயது மதிக்கத்தக்க கௌரிராஜன் கஜன் என்ற ஒரு பிள்ளையின் தந்தையான இளம்குடும்பஸ்தர் வெட்டி கொலை செய்யப்பட்டுள்ளார்.
இச்சம்பவம் தொடர்பாக அக்கராயன் பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
குறித்த சம்பவம் தொடர்பாக கிளிநொச்சி நீதிமன்ற நீதவானின் உத்தரவுக்கு அமைவாக சடலம் பிரேத பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு பின்னர் உறவினரிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்
