காலி-கொழும்பு பிரதான வீதியில் ரத்கம சந்திக்கு அருகில் நடந்த விபத்தில் 77 வயதுடைய மூதாட்டி ஒருவர் உயிரிழந்துள்ளார்.
காலியில் இருந்து ஹிக்கடுவ நோக்கி பயணித்த பேருந்து, வீதியோரத்தில் நடந்து சென்ற பெண் மீது மோதியதில் இந்த விபத்து சம்பவித்துள்ளது.
விபத்தில் பலத்த காயமடைந்த மூதாட்டி, காலி மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நிலையில் உயிரிழந்தாக தெரிவிக்கப்படுகிறது.
சடலம் காலி மருத்துவமனையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன், விபத்துடன் தொடர்புடைய பேருந்தின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
