Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
அண்மைய செய்திகள்இலங்கை

ஏறாவூர் சுற்றுலா நீதிமன்ற சிறைக்கூடத்தில் ஆண் ஒருவர் தற்கொலை

செப்டம்பர் 26, 2025
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

ஏறாவூர் சுற்றுலா நீதவான் நீதிமன்றத்தில் சிறைக்கூடத்தில் 40 வயதுடைய ஆண் ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் இன்று வெள்ளிக்கிழமை (26) இடம் பெற்றுள்ளதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர்.

ஏறாவூர் மிச் நகர பிரதேசத்தைச் சேர்ந்த 40 வயதுடைய 2 பிள்ளைகளின் தந்தையான வாச்சுக்குட்டி நெவ்பர் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இதுபற்றி மேலும் தெரியவருவதாவது

குறித்த நபரை கடந்த 21 திகதி ஞாயிற்றுக்கிழமை 2400 மில்லி கிராம் ஹெரோயின் போதைப்பொருளுடன் ஏறாவூர் பொலிசார் கைது செய்து 22ம் திகதி ஏறாவூர் சுற்றுலா நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட போது, அவரை இன்று 26 ம் திகதி வெள்ளிக்கிழமை வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

இந்நிலையில் சம்பவ தினமான இன்று குறித்த நபருக்கு எதிரான வழக்கில் அவரை சிறைச்சாலையில் இருந்து நீதிமன்றத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டு திறந்த நீதிமன்ற சிறைக்கூடத்தில் அடைக்கப்பட்டார்.

திறந்த நீதிமன்ற நடவடிக்கை பதில் நீதவான் ரி.தியாகேஸ்வரன் முன்னிலையில் இடம்பெற்றுக் கொண்டிருந்த நிலையில் குறித்த நபர் காலை 11.50 மணியளவில் சிறைக்கூடத்தில் உள்ள மலசல கூடத்திற்கு சென்று ஜன்னல் கம்பியில் தனது சாரத்தை கழற்றி கழுத்தில் மாட்டி தற்கொலை செய்து கொண்டார்.

இதனையடுத்து தடவியல் பிரிவு பொலிசார் வரவழைக்கப்பட்டு விசாரணைகளை மேற்கொண்டு வருவதுடன், நீதவானின் அனுமதி பெற்று சடலத்தை பிரேத பரிசோதனைக்காக வைத்தியசாலையில் ஒப்படைப்பதற்கான நடவடிக்கையை முன்னெடுத்து வருவதாக பொலிசார் தெரிவித்தனர்.

இதேவேளை குறித்த நபருக்கு எதிராக இரண்டு திருட்டுக்கள் தொடர்பாகவும் இரண்டு போதை பொருள் தொடர்பாகவும் 4 வழக்குகள் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

முந்தைய செய்தி 3,400 பில்லியன் ரூபாயை எட்டியுள்ள வருமான வரி!
அடுத்த செய்தி முதிரைக்குற்றிகளுடன் விபத்திற்குள்ளான வாகனம் – வாகன சாரதி மாயம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
வெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறு

எம்மவர் நிகழ்வுகள்

MEGA BLAST

ஆத்மஜோதி தமிழர் இணையத்தின் முத்தமிழாராம் 2026

செம்மண் இரவு

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்இலங்கை

2024 க.பொ.த உயர்தரப் பரீட்சை மீளாய்வு காலம் நீடிப்பு…

மே 27, 2025
அண்மைய செய்திகள்அறிவியல் & தொழில்நுட்பம்

எக்ஸ் தளம் முடக்கம்….

மார்ச் 10, 2025
இலங்கை

வடக்கில் மணல் மற்றும் கிரவல் விநியோகம்

மார்ச் 10, 2026
அண்மைய செய்திகள்இலங்கை

மல்யுத்தப் போட்டிக்கான தெரிவில் வித்தியானந்தக் கல்லூரி மாணவர்கள் சாதனை

ஏப்ரல் 10, 2026
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?