Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
இலங்கை

சாவகச்சேரி வைத்தியசாலையின் வசதிகளை அதிகரிக்க நடவடிக்கை – ஆ.கேதீஸ்வரன்

ஜனவரி 31, 2025
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

எதிர்காலத்தில் சாவகச்சேரி மற்றும் ஊர்காவற்றுறை மருத்துவமனைகளின் வசதிகளை அதிகரிப்பதன் ஊடாக போதனா மருத்துவமனையின் பணிச்சுமையை மேலும் குறைக்க முடியும் என யாழ்ப்பாண பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் மருத்துவக் கலாநிதி ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.

வடக்கு மாகாணசபையின் பல்வேறு நிதி மூலங்கள் ஊடாக 10 மில்லியன் ரூபா செலவில் புனரமைப்புச் செய்யப்பட்ட பருத்தித்துறை ஆதார மருத்துவமனையின் சிசுக்கள் அதிதீவிர சிகிச்சைப் பிரிவு நேற்றைய தினம் வியாழக்கிழமை திறந்து வைக்கப்பட்டது.

அந்நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவ்வாறு தெரிவித்தார்

மேலும் தெரிவிக்கையில்,

நான் கடந்த 2005ஆம் ஆண்டு மார்ச் மாதம் இந்தப் பதவிக்கு வந்தேன். அப்போது யாழ்ப்பாண மாவட்டத்தில் ஓய்வுபெற்ற மூவரே மருத்துவ அதிகாரிகளாகப் பணியாற்றினர். இன்று 350 பேர் பணியாற்றுக்கின்ற நிலைமைக்கு வந்துள்ளது.

வடக்கு மாகாணத்தின் சுகாதாரத்துறை சாம்பலிருந்தே மீண்டெழுந்திருக்கின்றது. தெல்லிப்பழை, பருத்தித்துறை ஆதார மருத்துவமனைகள் ஓரளவு சிறப்பாக இயங்குகின்றமையால் யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையின் நெருக்கடிக்களை குறைக்க முடிந்துள்ளது.

எதிர்காலத்தில் சாவகச்சேரி மற்றும் ஊர்காவற்றுறை மருத்துவமனைகளின் வசதிகளை அதிகரிப்பதன் ஊடாக போதனா மருத்துவமனையின் பணிச்சுமையை மேலும் குறைக்க முடியும்.

அத்துடன் ஆளணி மீளாய்வு அவசியம் மேற்கொள்ளப்பட வேண்டும். மேலும் பருத்தித்துறை ஆதார மருத்துவமனையில் திறந்து வைக்கப்பட்ட சிசுக்கள் அதிதீவிர சிகிச்சைப் பிரிவு ஒட்டுமொத்த வடக்கு மாகாணத்துக்கும் சேவைகளை வழங்கும்.

முக்கியமாக கடந்த டிசம்பர் மாதம் பரவிய எலிக்காய்ச்சலை இங்குள்ள மருத்துவர்கள், தாதியர்கள், சிற்றூழியர்கள் மற்றும் பொதுச் சுகாதாரத்துறையினர் இணைந்து கட்டுப்படுத்தினர்.

இது தொடர்பில் மத்திய சுகாதார அமைச்சின் தொற்றுநோய் தடுப்புப் பிரிவு மிகச் சிறந்த பாராட்டைத் தெரிவித்துள்ளது. இது உங்களின் அர்ப்பணிப்பான சேவைக்கு கிடைத்த வெற்றி என தெரிவித்தார்.

முந்தைய செய்தி சுகாதாரத்துறை மீது சகட்டுமேனிக்கு குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்படுகிறது – வை.திவாகர்
அடுத்த செய்தி யாழில் ஜனாதிபதியின் கவனத்தை ஈர்க்கும் வகையில் வேலையற்ற பட்டதாரிகள் போராட்டம்.

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளி

எம்மவர் நிகழ்வுகள்

மொன்றியல் அருள்மிகு திருமுருகன் கோயில் புனருத்தாரண மஹா கும்பாபிஷேகம்

கியூபெக் தமிழர் பெருவிழா & MEGA BLAST

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

இலங்கை

நல்லூரிலும் போராட்டம்.

பிப்ரவரி 4, 2025
இலங்கை

வடமராட்சியில் கொலைக்கு உதவிய தந்தையும் கைது

மார்ச் 13, 2026
இலங்கை

நல்லூர் மந்திரிமனைக்கு இரும்பு கம்பிகளால் பாதுகாப்பு!

செப்டம்பர் 18, 2025
இலங்கை

வவுனியாவில் முச்சக்கர வண்டியின் மீது முறிந்து விழுந்த மரணம் – மயிரிழையில் தப்பிய முதிய பெண்மணி

பிப்ரவரி 23, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?