வவுனியா, பேயாடிகூழாங்குளத்தில் இன்று இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் முதியவர் ஒருவர் காயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
வவுனியா நகரில் இருந்து ஓமந்தை நோக்கி சென்ற மோட்டார் சைக்கிள் மீது மாடு மோதியே குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.
குறித்த விபத்தில் ஒமந்தையை சேர்ந்த 54 வயதினுடைய முதியவர் ஒருவரே காயமடைந்துள்ளார்.
விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை வவுனியா பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
