Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
இலங்கை

வரலாற்றுச் சிறப்புமிக்க வாய்ப்பை இலங்கை தற்போது பெற்றுள்ளது-வோல்கர் டர்க்!

செப்டம்பர் 8, 2025
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

பல தசாப்தங்களாக ஆதிக்கம் செலுத்தி வந்த வன்முறை மற்றும் தண்டனையின்மை சுழற்சிகளிலிருந்து மீள்வதற்கான வரலாற்றுச் சிறப்புமிக்க வாய்ப்பை இலங்கை தற்போது பெற்றுள்ளதாக ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் வோல்கர் டர்க் தெரிவித்துள்ளார்.

மாற்றத்தக்க சீர்திருத்தம், பொறுப்புக்கூறல், உண்மை மற்றும் நீதி ஆகியவற்றிற்காக நாடு முழுவதிலுமிருந்தும், அரசாங்கத்திற்கு தெளிவான ஆணை கிடைத்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஜெனீவாவில் ஆரம்பமாகியுள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 60 ஆவது கூட்டத் தொடரில் இலங்கை தொடர்பாக அறிக்கையை சமர்பித்து உரையாற்றும் போதே அவர் இந்த விடயங்களை தெரிவித்துள்ளார்.

இதனிடையே அண்மையில், தாம், இலங்கைக்கு விஜயம் செய்த போது, நாட்டின் மிக நீண்டகால பிரச்சினைகளுக்கு புதிய திசை நோக்கிய பயணத்திற்கு அந்த நாட்டின் தலைமை உறுதியளித்துள்ளதாகவும் வோல்கர் டர்க் குறிப்பிட்டுள்ளார்.

இந்தநிலையில், புதிய அணுகுமுறை, ஒத்திசைவானதும், காலக்கெடுவை வழங்கக்கூடியதாகவும் அமைய வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.

பொறுப்புக்கூறல், நீதியை வழங்குதல், நீண்டகாலமாக இலங்கை மக்கள் அனுபவித்துவரும் அரசியல் ரீதியான பாகுபாடுகள் மற்றும் பிரிவினையை நீக்குதல் போன்ற விடயங்களில் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாகவும் வோல்கர் டர்க் தெரிவித்துள்ளார்.

முந்தைய செய்தி கமல், ரஜினி கூட்டணி இணைவது உறுதி
அடுத்த செய்தி மனித உரிமை மீறல்களை விசாரிப்பதற்கான வழிமுறைகளை இலங்கை நிராகரிக்கிறது-விஜித ஹேரத்!

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்இலங்கை

இலங்கை தமிழ் அரசுக் கட்சிக்கும், ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணிக்கும் இடையில் சந்திப்பு

மார்ச் 28, 2026
இலங்கை

முன்னாள் பொலிஸ் மா அதிபர் பிரியந்த ஜெயக்கொடிக்கு விளக்கமறில்!

ஜூலை 29, 2025
இலங்கை

மன்னார் மக்களின் போராட்டத்திற்கு நீதி கிடைக்க வேண்டும்-அருட்தந்தை ஜீவந்த பீரிஸ் எச்சரிக்கை!

செப்டம்பர் 9, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

வடமராட்சி கிழக்கு பிரதேச செயலகம் முன்பாக இடம்பெற்ற கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம்

ஏப்ரல் 10, 2026
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?