அமெரிக்கப் பொருட்களுக்கு இந்தியா 100% வரி விதிக்கிறது என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்தார்.
நாங்கள் இந்தியாவுடன் நாம் நன்றாகப் பழகுகிறோம். ஆனாலும், அமெரிக்கப் பொருட்களுக்கு இந்தியா 100% வரி விதிக்கிறது.
பல ஆண்டுகளாக அமெரிக்க – இந்திய உறவு ஒருதலைப்பட்சமாக இருந்ததுடன், வர்த்தக உறவும் நியாயமற்றதாக இருந்தது.
ஹார்லி டேவிட்சன் (Harley Davidson) உந்துருளிக்கு இந்தியாவில் 200% வரி விதிக்கும் போது எப்படி அதனை அங்கு விற்பனை செய்ய முடியுமென ட்ரம்ப் கேள்வியெழுப்பியுள்ளார்.
அதனால், அந்த நிறுவனம் இந்தியா சென்று வாகனங்களைத் தயாரிக்கிறது.
இதன் காரணமாக இந்தியப் பொருட்கள் அமெரிக்க சந்தைக்குள் சுதந்திரமாக நுழைகின்றன.
வலுவான இராஜதந்திர உறவை உறுதிப்படுத்தும் அதே வேளையில், இரு தரப்பினரும் ஒரே மாதிரியான விதிகள் படி செயல்பட வேண்டும்.
இந்தியா மீது அமெரிக்கா விதித்துள்ள வரியானது, இருநாடுகளுக்கு இடையே வர்த்தகப் போரை உருவாக்கியிருக்கிறது.
ஆனால் 50 சதவீத வரியைத் திரும்பப் பெறும் எண்ணமில்லை.
இந்தியா உறவு ஒருதலைப்பட்சமாக இருக்கிறது.
இந்திய இறக்குமதி பொருட்கள் மீது இத்தனை ஆண்டுகளாக முட்டாள்தனமாக அதிக வரி விதிக்காமல் இருந்துவிட்டோம் என ட்ரம்ப் கூறியுள்ளார்.
