முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் செயலாளரான சமன் ஏக்கநாயக்க நாளைய தினம் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் சிறப்பு புலனாய்வுப் பிரிவில் முன்னிலையாகுமாறு அழைக்கப்பட்டுள்ளார்.
வாக்குமூலம் பதிவு செய்வதற்காக அவர் அழைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் குறித்த சர்ச்சைக்குரிய பயணம் 2023 ஆம் ஆண்டு செப்டம்பர் 22 மற்றும் 23, ஆகிய திகதிகளில் மேற்கொள்ளப்பட்டதுடன் அவருடன் அந்த பயணத்தில் 10 பேர் பங்கேற்றதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை, குறித்த சம்பவம் தொடர்பில் குற்றப் புலனாய்வுத் துறை நேற்று முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் தனிப்பட்ட செயலாளர் சாண்ட்ரா பெரேராவிடம் ஆறு மணி நேரத்திற்கும் மேலாக வாக்குமூலங்களை பதிவு செய்தமை குறிப்பிடத்தக்கது.
