Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
இலங்கை

கேப்பாப்புலவு மக்களின்காணியை கோரிய விமானப்படை-கடுமையான எதிரப்புவெளியிட்ட ரவிகரன் எம்.பி!

ஆகஸ்ட் 29, 2025
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

முல்லைத்தீவு – கேப்பாப்பிலவில் அமைந்துள்ள 0.5ஹெக்டயர் மக்களின் விவசாயக்காணிகளை தமது தேவைக்கென கேப்பாப்புலவு விமானப்படையினர் முல்லைத்தீவு மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக்குழுவின் அனுமதியைக் கோரியிருந்தனர்.

இந்நிலையில் கேப்பாப்பிலவில் ஏற்கனவே படையினரால் மக்களின் காணிகள் பல அபகரிக்கப்பட்டுள்ளமையைச் சுட்டிக்காட்டிய வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன், விமானப்படையினரின் இக்கோரிக்கைக்கு தமது கடுமையான எதிர்ப்பினையும் வெளியிட்டிருந்தார்.

அந்தவகையில் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் அவர்களது கடுமையான எதிர்ப்பினையடுத்து விமானப்படையினருக்கு காணி வழங்கப்படுவதில்லை என 29.08.2025 இன்று இடம்பெற்ற மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக்குழுக்கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது.

இதுகுறித்து நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் கருத்துத் தெரிவிக்கையில்,

படையினரால் ஏற்கனவே ஆக்கிரமித்திருந்த குறித்த காணி விடுவிப்புச்செய்யப்பட்டநிலையில், அக்காணியில் மக்கள் விவசாயநடவடிக்கையில் ஈடுபட்டுவருகின்றனர். அந்தக்காணியினை விமானப்படை தமக்குத்தருமாறு மீண்டும் கோருவது பொருத்தமற்ற செயற்பாடாகும்.

அத்தோடு இன்னும் 190ஏக்கர் அளவில் மக்களுக்குரிய காணிகள் கேப்பாப்பிலவில் விடுவிக்கப்படவேண்டியுள்ளது. இந்நிலையில் தமது காணிகளை விடுவிக்கவேண்டுமென கேப்பாப்புலவு மக்கள் தொடர்ந்து போராடியும், கோரிக்கைகளை முன்வைத்தும்வருகின்றனர்.

இவ்வாறிருக்க மீண்டு விமானப்படையினர் விடுவிக்கப்பட்ட மக்களின் காணியினை மீண்டும் கோருவது வேடிக்கையாகவுள்ளது.

யுத்தம் மௌனிக்கப்பட்டு ஒன்றரைத் தசாப்தகாலத்திற்கு மேலாகியுள்ள நிலையில் மக்களின் காணிகளை அபகரித்து இங்கிருந்துகொண்டு விமானப்படையினர் யாருடன் யுத்தம் செய்யப்போகின்றனர்.

எனவே கேப்பாப்புலவு மக்களின் விவசாயக் காணிகளை விமானப்படைக்கு வழங்குவதற்கு ஒருபோதும் அனுமதிக்கமுடியாதென இதன்போது தனது கடுமையான எதிர்ப்பினை வெளியிட்டிருந்தார்.

இந்நிலையில் நாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் அவர்களது கடுமையான எதிர்ப்பினையடுத்து விமானப்படையினருக்கு காணி வழங்குவதில்லை என முல்லைத்தீவு மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக்குழுக்கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

முந்தைய செய்தி கடல் பாசியால் இயங்கும் ரொபோ மீன்!
அடுத்த செய்தி முன்னாள் ஜனாதிபதி கைதானது எல்லா திருடர்களையும் வெளிக்காட்டியுள்ளது – க.இளங்குமரன் தெரிவிப்பு!

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
சனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்இலங்கை

யாழில் பிரசவத்தின் போது தாய் உயிரிழப்பு!

அக்டோபர் 10, 2025
1
அண்மைய செய்திகள்இலங்கை

அத்துமீறி மீன் பிடித்த தமிழக கடற்தொழிலாளர்கள் மூவர் கைது..

மார்ச் 18, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

யாழில் பலத்த காற்றுடன் கூடிய மழை காரணமாக, 12 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்!

செப்டம்பர் 8, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

அரச மருத்துவ அதிகாரிகள் தொழிற்சங் நடவடிக்கை முன்னெடுக்க தீர்மானம்!

ஆகஸ்ட் 7, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?