ரணில் விக்ரமசிங்க மீது சட்டம் பாய்ந்துள்ளதால், ராஜபக்ஷக்கள் அச்சமடைந்துள்ளதாக அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்தார்.
அத்துடன், நாட்டுக்குத் தீங்கை ஏற்படுத்தியது ரணிலா அல்லது ராஜபக்ஷவா என்பது தமக்கு முக்கியம் அல்ல என்றும் எவராக இருந்தாலும் ஊழல், மோசடிகளில் ஈடுபட்டவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
யாழ்ப்பாணத்தில் உள்ள தேசிய மக்கள் சக்தி அலுவலகத்தில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
