Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
இலங்கை

புத்தக திருவிழாவிற்கு அதிகாரிகளால் இடையூறுகள் ஏற்படுத்தப்பட்டிருந்தன – ஆளுநர்

ஆகஸ்ட் 16, 2025
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

புத்தகங்களின் முக்கியத்துவத்தை நாம் யாழ்ப்பாண நூலக எரிப்பிலிருந்து புரிந்துகொள்ளலாம். யாழ்ப்பாணத்தில் எவ்வளவோ கட்டடங்கள் இருந்தும் அன்று ஏன் நூல் நிலையத்தை பல ஆயிரம் புத்தகங்களோடு தீயிட்டு எரித்தார்கள் என்பதைச் சிந்தித்தோம் என்றால், புத்தகங்களின் அருமை எமக்குத் தெரியும் என வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் தெரிவித்தார்.

யாழ்ப்பாண கலாசார மண்டபத்தில், யாழ்ப்பாணம் வர்த்தக தொழில்துறை மன்றமும், எங்கள் புத்தகங்கள் அமைப்பும் ஒன்றிணைந்து ஏற்பாடு செய்துள்ள இரண்டாவது சர்வதேச புத்தகக் கண்காட்சியை நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை ஆரம்பித்து வைத்து பிரதம விருந்தினர் உரையாற்றுகையிலேயே ஆளுநர் இவ்வாறு குறிப்பிட்டார்.

மேலும் தெரிவிக்கையில்,

நாம் ஒரு புத்தகத்தை வாசித்துக்கொண்டிருக்கும் போது இடைநடுவில் ஏதாவது இடையூறு வந்தால் எரிச்சலாகத்தான் இருக்கும். ஒரு புத்தகத்தினுள் மூழ்கினோம் என்றால் அப்படித்தான் இருக்கும். ஒரு புத்தகத்தை படித்தால் அடுத்த புத்தகமும் படிக்கவேண்டும் என்ற ஆர்வம் எங்களுக்கு ஏற்பட வேண்டும். நாம் வாசிப்பதால் ஒருபோதும் குறைந்துவிடப்போவதில்லை.

இன்று போட்டிப் பரீட்சைகளில் நுண்ணறிவு வினாக்களுக்கு மேலதிகமாக பொது அறிவு வினாக்களும் கேட்கப்படுகின்றன. புத்தகங்களை வாசித்திருந்தால் மாத்திரமே எம்மால் அவற்றில் சித்தியடைய முடியும்.

இந்த நிகழ்வின் ஏற்பாட்டாளர்களுக்கு எங்கள் அதிகாரிகளால் சில இடையூறுகள் ஏற்பட்டிருந்தன. அது தொடர்பில் வருந்துகின்றேன். எங்கள் அதிகாரிகளின் மனங்களில் மாற்றம் வரவேண்டும் என்றுதான் நான் பல தடவைகள் சொல்லியிருக்கின்றேன். நேர் சிந்தனையில் அவர்கள் சிந்திக்கின்றார்கள் இல்லை என்பதுதான் பிரச்சினை. எங்களுக்கு வருமானம் தரக்கூடிய விடயங்களுக்கு தேவையான ஒழுங்குகளைச் செய்து கொடுக்கின்றார்கள் இல்லை.

நாங்கள் முதலீட்டாளர்களை வாருங்கள் என்று அழைக்கின்றோம். ஆனால் எங்கள் அதிகாரிகளில் சிலர் அவர்களுக்கு முழுமையான ஒத்துழைப்பை வழங்குகின்றார்கள் இல்லை. ஏன் அப்படி நடந்துகொள்கின்றார்கள் என்பது தெரியவில்லை.

முதலீட்டாளர்கள் வந்தால்தான் எங்களுக்கு வரி வருமானம் கிடைக்கும். வரி வருவாய் கிடைத்தால்தான் நாங்கள் முன்னேற முடியும். ஏன் இவற்றை அதிகாரிகள் புரிந்துகொள்ளவில்லை என்பது எனக்கு விளங்கவில்லை. இவற்றில் மாற்றத்தை ஏற்படுத்த நிச்சயம் முயற்சிக்கின்றோம் என ஆளுநர் தெரிவித்தார்.

முந்தைய செய்தி வவுனியாவில் விழிப்புணர்வு பேரணி
அடுத்த செய்தி இந்திய சுதந்திர தினத்தினை முன்னிட்டு யாழில் நடன நிகழ்வு

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளி

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

இலங்கை

நாங்கள் வாகன அனுமதி பத்திரங்களை விற்கவில்லை – பிரதி அமைச்சர் சுனில் வட்டகல

பிப்ரவரி 20, 2026
இலங்கை

யாழ். சிறைச்சாலை நிர்வாகத்தினரால் வழங்கப்பட்ட அன்னதானம்

பிப்ரவரி 1, 2026
அண்மைய செய்திகள்இலங்கை

இலங்கை இராணுவம் வெளியிட்ட விசேட அறிக்கை!

ஜூன் 22, 2025
1
அண்மைய செய்திகள்இலங்கை

பேருந்து நிலையம் நகரசபையால் அகற்றம்!

ஏப்ரல் 5, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?