Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
அண்மைய செய்திகள்இலங்கை

ஹட்டனில் நகைக் கடையில் பெறுமதியான நகைகளை திருடிய பெண் கைது!

ஆகஸ்ட் 4, 2025
படிக்க 2 நிமிடங்கள்
SHARE

ஹட்டன் நகரின் குறுக்குத் தெருவில் உள்ள ஒரு நகைக் கடையில் இருந்து ரூ.275,000 மதிப்புள்ள தங்க நெக்லஸை எடுத்துக்கொண்டு தப்பிச் சென்றதாகக் கூறப்படும் பெண்ணை ஹட்டன் பொலிஸார் சந்தேகத்தின் பேரில் கைது செய்தனர்.

அந்த பெண்ணை, ஹட்டன் பதில் நீதவான் எஸ். பார்த்தீபன் முன்னிலையில் ஆஜர்படுத்தினர். சந்தேக நபர் குற்றத்தை ஒப்புக்கொண்டதால், குற்றம் சாட்டப்பட்ட பெண்ணை ரூ.500,000 தனிப்பட்ட பிணையில் விடுவிக்கவும், வழக்கை இம்மாதம் 05ம் திகதி அன்று மீண்டும் விசாரிக்கவும் பதில் நீதவான் உத்தரவிட்டார்.

ஹட்டன் பொலிஸார் நடத்திய ஆரம்ப விசாரணையில், குற்றம் சாட்டப்பட்ட பெண் சிறிது காலமாக மஸ்கெலியா- சாமிமலை பகுதியில் வசித்து வருவதாகவும், தற்போது கொழும்பு பகுதியில் வசித்து வருவதாகவும் தெரியவந்துள்ளது.

மேலும், ஒரு ஆடைத் தொழிற்சாலையில் பணிபுரிந்து வரும் நிலையில், அவர் தனது கணவரிடமிருந்து பிரிந்து இருப்பதாகவும் தெரியவந்துள்ளது.

தனியார் நிதி நிறுவனத்தில் அடகு வைத்த தங்க நகைகளை மீட்டெடுக்க ஹட்டன் நகரத்திற்கு, கடந்த மாதம் 1 ஆம் திகதி, வந்த குற்றம் சாட்டப்பட்ட பெண், மீட்டெடுத்த தங்க நகைகளை அதிக விலைக்கு மீண்டும் அடகு வைத்து, ரூ.110,000 எடுத்துக்கொண்டு, தங்க நெக்லஸ் வாங்க சென்றுள்ளார்.

அந்தப் பெண்ணின் இடது கை அவரது கைப்பையின் உள்ளேயே இருப்பதை கண்டு சந்தேகமடைந்த நகைக் கடை உரிமையாளர், மிகுந்த கவனத்துடன் ஒரு பவுண் தங்க நெக்லஸைக் காட்டினார்.

அந்த நேரத்தில், அந்தப் பெண் கடை உரிமையாளரிடம் நகையை தன்னிடம் ஒப்படைக்குமாறு கேட்டுக் கொண்டார், கடை உரிமையாளர் கோரிக்கையை நிராகரித்தபோது, அந்தப் பெண் தனது கைப்பையில் இருந்து ஒரு திரவ டப்பாவை எடுத்து கடை உரிமையாளர் மீது விசிறியுள்ளார்.

உடனடியாக நடவடிக்கை எடுத்த கடை உரிமையாளர், அருகிலுள்ள கடை உரிமையாளர்களின் உதவியுடன், அந்தப் பெண்ணைப் பிடித்து ஹட்டன் பொலிஸாரிடம் ஒப்படைத்தார்.

தனது தந்தையின் நோய்க்கு பணம் செலுத்த பணம் தேடுவதற்காக ஹட்டன் நகரத்திற்கு வந்ததாக அவர் பொலிஸாரிடம் கூறியிருந்தார்.

நாட்டின் பல்வேறு பகுதிகளில் உள்ள தனியார் நிதி நிறுவனங்களில் தங்க நகைகளை அடகு வைத்ததற்கான பல ரசீதுகள் மற்றும் தங்க முலாம் பூசப்பட்ட பல நெக்லஸ்கள் அவரது கைப்பையில் இருந்து கண்டுபிடிக்கப்பட்டதாக ஹட்டன் தலைமையக பொலிஸ் அதிகாரி டபிள்யூ.ஆர்.ஏ.டி. சுகததாச தெரிவித்தார்.

முந்தைய செய்தி செம்மணியில் ஸ்கேன் நடவடிக்கைகள் ஆரம்பம்!
அடுத்த செய்தி ரஷ்ய எண்ணெய் கிடங்கு மீது உக்ரைன் தாக்குதல்!

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்

எம்மவர் நிகழ்வுகள்

MEGA BLAST

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

இலங்கை

யாழில். இந்திய நிதியுதவியில் கட்டப்பட்ட கட்டடத்திற்கு மூன்றாவது தடவையாக பெயர் மாற்றம்.

பிப்ரவரி 3, 2025
இலங்கை

மருமகன் தாக்கியதில் மாமனார் பலி – மருமகன் கைது.

பிப்ரவரி 18, 2025
அண்மைய செய்திகள்ஆன்மீகம்

இன்றைய முக்கிய நிகழ்வுகள் மற்றும் பஞ்சாங்கம்- 20 மே 2025

மே 20, 2025
அண்மைய செய்திகள்கனடா

கனடாவில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் இலங்கை பெண் பலி…..

மார்ச் 11, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?