Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
இலங்கை

பிரதமர் தலைமையில் பெண் சாரணியர் விருது வழங்கும் விழா இன்று!

ஆகஸ்ட் 2, 2025
படிக்க 2 நிமிடங்கள்
SHARE

பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய இன்றைய சமூகத்தில் பெண் தலைமைத்துவத்தை உருவாக்குவதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தி இந்தத் தேவையைப் பூர்த்திசெய்யும் திறன் இலங்கை பெண் சாரணியர் சங்கத்திடம் உள்ளது என்று கூறினார்.

உலகின் மிகப்பெரிய பெண்களுக்கான தன்னார்வ அமைப்பின் ஓர் அங்கமான இலங்கை பெண் சாரணியர் சங்கத்தால், இன்று அலரி மாளிகையில் ஏற்பாடு செய்யப்பட்ட ஜனாதிபதி பெண் சாரணியர் விருது வழங்கும் விழாவில் உரையாற்றும் போதே பிரதமர் இதனை தெரிவித்தார்.

இவ்விழாவில், ஒரு பெண் சாரணியர் பெறக்கூடிய மிக உயர்ந்த கௌரவ விருதான ஜனாதிபதி பெண் சாரணியர் விருது 301 பெண் சாரணியர்களிற்கு வழங்கப்பட்டது. அதேவேளை,பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய மேலும் கூறியதாவது:

“இலங்கை பெண் சாரணியர் சங்கத்தால் வழங்கப்படும் ஜனாதிபதி மற்றும் பிரதமர் விருது வழங்கும் விழாவில் பங்கேற்பதில் நான் மகிழ்ச்சி அடைகிறேன். 1917 ஆம் ஆண்டில் கண்டியில் உள்ள மகளிர் உயர்தரப் பாடசாலையில் தொடங்கிய இந்த இயக்கம், இப்போது நாடு முழுவதும் பரவியுள்ளது.

இதன் மூலம், 8 வயது முதலே பெண் குழந்தைகள் நாட்டிற்குத் தலைமை தாங்குவதற்குத் தேவையான வலுவான மற்றும் முழுமையான ஆளுமையை வளர்த்து, பல்வேறு சவால்களை எதிர்கொள்ளக்கூடிய ஆற்றல்மிக்க சிறுமிகளாக உருவாவதற்கு வாய்ப்புக் கிடைக்கிறது.

நமது நாட்டிற்கு இதுபோன்ற வலிமையான எதிர்கால தலைமுறையே தேவை. இந்த விருது பெறுபவர்களின் அர்ப்பணிப்பும், அவர்களின் வெற்றிக்குப் பின்னால் இருந்த பெற்றோர்கள், ஆசிரியர்கள், சாரணியர்கள் மற்றும் சாரணிய தலைவர்களின் ஆதரவும் மிகவும் பாராட்டத்தக்கது.

நான் உங்களிடம் பிரதமர் என்ற முறையில் மட்டுமல்லாது, என் சிறுவயதில் ஒரு ‘சிறிய சிநேகிதியாக’இந்த இயக்கத்தில் இணைந்த ஒருவராகவும் பேசுகிறேன். அப்போது நான் பெற்ற அனுபவங்கள், எனது பயணம் முழுவதும் எனக்கு வழிகாட்டியாக இருந்துள்ளன.

இந்த இயக்கம் பெண்களுக்குத் தன்னம்பிக்கையையும், தலைமைத்துவப் பண்புகளையும் அளித்து, ஒவ்வொரு பெண்ணும் நாட்டின் எதிர்காலத்தைக் கட்டியெழுப்புவதில் பங்களிப்பதற்கான சூழலை உருவாக்குகிறது. இதுபோன்ற அமைப்புகளிடமிருந்து நாம் எதிர்பார்ப்பது இதுதான்.

அதேபோன்று, எமது அரசாங்கம் செயல்படுத்தி வரும் கல்விச் சீர்திருத்தங்களின் மூலமும், இதுபோன்ற பிள்ளைகளை உருவாக்குவதையே நாங்கள் நோக்கமாகக் கொண்டுள்ளோம்.”

இந்த நிகழ்வில், பாதுகாப்பு பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜயசூரிய, பெண் வழிகாட்டிச் சங்கத்தின் தலைவர் சொர்ணிகா பிட்டிகல, தலைமை ஆணையாளர் கலாநிதி குஷாந்த ஹேரத், சங்கத்தின் முன்னாள் தலைவர்கள் மற்றும் முன்னாள் ஆணையாளர்கள், கல்வி அமைச்சின் அதிகாரிகள், பெண் வழிகாட்டிச் சங்கத்தின் பல்வேறு மட்ட ஆணையாளர்கள் மற்றும் மாவட்ட ஆணையாளர்கள், பெண் வழிகாட்டித் தலைவர்கள், பெற்றோர்கள் மற்றும் விருது பெற்றவர்கள் கலந்துகொண்டனர்

முந்தைய செய்தி 2.26 மில்லியன் ரூபாய் மதிப்புள்ள ஐ.பி.எல். ஜேர்சிகள் திருட்டு!
அடுத்த செய்தி டிப்பர் வாகனம் ஏறியதில் குடும்பஸ்தர் சம்பவ இடத்தில் உயிரிழப்பு!

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
சனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

இலங்கை

யாழில் இடம்பெற்ற நாட்டிய நாடகம்.

பிப்ரவரி 3, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

வருடாந்த பேருந்து கட்டண திருத்தத்தை ஒரு மாதத்திற்கு ஒத்திவைக்க நடவடிக்கை!

ஜூன் 1, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

தவெக தலைவர் விஜய்க்கு வாழ்த்துக்களை தெரிவித்த ஜீவன் தொண்டமான்

மே 6, 2026
அண்மைய செய்திகள்இலங்கை

நீதிமன்றங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவித்தல்!

அக்டோபர் 18, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?