பயங்கரவாத தடைச்சட்டத்தை இல்லாது செய்யக் கோரி நாடு முழுவதும் முன்னெடுக்கப்பட்டுவரும் அடையாள கையெழுத்து போராட்டம் இன்று அம்பாறை மாவட்டம் கல்முனை மாநகரில் இடம்பெற்றது.
சம உரிமை இயக்கம் என்ற அமைப்பினரால் முன்னெடுக்கப்பட்ட குறித்த போராட்டம் கல்முனை மாநகர அம்மன் கோயில் வீதியில் முன்னெடுக்கப்பட்டது.
இதன்போது “இன்னொரு அடக்குமுறை சட்டம் வேண்டாம், பயங்கரவாத தடைச் சட்டத்தை ரத்து செய்”, “காணாமல் ஆக்கப்பட்ட அனைவருக்கும் இப்போதாவது நீதி வழங்கு”, “அனைத்து தேசிய இனத்தவர்களுக்கும் சம உரிமைகளை உறுதிசெய்யும் புதிய அரசியலமைப்புக்காகப் போராடுவோம்” உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து குறித்த கையெழுத்திடும் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுக்கும் முகமாக இவ் கையெழுத்துப் போராட்டத்தில் அனைத்து இன மக்களும் அதிகளவில் கலந்து கொண்டு ஆர்வத்துடன் கையெழுத்து இட்டிருந்தார்கள்.
இதேவேளை இப்போராட்டத்தில் ஒரு துண்டுப்பிரசுரமும் விநியோகிக்கப்பட்டிருந்தது.
இதற்கிடையில், வடக்கில் உள்ள மனிதப் புதைகுழிகளில் சிறு குழந்தைகளின் எலும்புக்கூடுகள் கூட கண்டுபிடிக்கப்படுகின்றன. இவர்கள் அனைவருக்கும் நீதி வழங்கப்பட வேண்டும். இதற்கு பரந்த அளவிலான பொதுமக்களின் ஈடுபாடு தேவைப்படுகின்ற நிலையில் சம உரிமை இயக்கம் அதற்கு அரசியல் தலைமையை வழங்க தயாராக உள்ளது. சம உரிமை இயக்கத்தின் தொடக்கத்திலிருந்தே. இனவாதம் மற்றும் தேசிய ஒடுக்குமுறையை ஒழித்து, அனைத்து இனத்தவர்களுக்கும் சம உரிமைகளை வழங்கும் அரசியல் திரவை அடைவதே எங்கள் குறிக்கோளாக இருந்துவருகிறது. இந்த முயற்சியில் எங்களுடன் இணையுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டது.
காணாமல் ஆக்கப்பட்ட அனைவருக்கும். இப்போதாவது நீதி வழங்கு!, இன்னொரு அடக்குமுறை சட்டம் வேண்டாம்!, பயங்கரவாதத் தடைச் சட்டத்தை உடனடியாக ரத்து செய்!, அனைத்து தேசிய இனத்தவர்களுக்கும் சம உரிமைகளை உறுதி செய்யும் புதிய அரசியலமைப்புக்காகப் போராடுவோம்! ஆகிய கோரிக்கைகளை சம உரிமைகளுக்கான இயக்கம் என குறிப்பிடப்பட்டுள்ளது.
