நுவரெலியா மாவட்டத்தில் நிலவும் சீரற்ற காலநிலையால் மஸ்கெலியா புரவுன்சீக் தோட்ட மோட்டீங்ஹேம் பிரிவில் இன்று (19) மரக்கிளை முறிந்து விழுந்ததில் விறகு சேகரிக்கச் சென்றவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
மூன்று பிள்ளைகளின் தந்தையான ராசமாணிக்கம் செல்வக்குமார் 44 வயதுயவரே இவ்வாறு உயிரிழந்துள்ளரென மஸ்கெலியா பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அவரது உடல் மஸ்கெலியா மாவட்ட வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது. மேலும் விசாரணைகள் மஸ்கெலியா பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
