Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
அண்மைய செய்திகள்இலங்கை

தவிசாளர்களை புறக்கணிக்கும் தேசிய மக்கள் சக்தி

ஜூலை 19, 2025
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

யாழ்ப்பாணத்தில் நடைபெறும் நிகழ்வுகளில் அப்பிரதேச தவிசாளர்களை தேசிய மக்கள் சக்தியினர் தொடர்ந்து புறக்கணித்து வருகின்றனர்.

கடந்த மாதம் மறுமலர்ச்சிக்கான பாதை திட்டத்தின் கீழ் காங்கேசன்துறை நடேஸ்வர கல்லூரி வீதி புனரமைப்பு பணியின் ஆரம்ப நிகழ்வில் வலி. வடக்கு பிரதேச சபை தவிசாளருக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை.

அவ்வேளை அவ்விடத்திற்கு தவிசாளர் வருகை தந்த போதிலும், நிகழ்வினை ஏற்பாடு செய்திருந்த தேசிய மக்கள் சக்தியின் முக்கியஸ்தர்கள் தவிசாளரை புறக்கணித்து இருந்தனர்.

அந்நிகழ்வில் கடற்தொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரர் , நாடாளுமன்ற உறுப்பினர் ஶ்ரீபவானந்தராசா ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.

அதே போன்று கடந்த வாரம் நயினாதீவு பிரதேச வைத்திய சாலையின் வெளிநோயளர் பிரிவுக்கான புதிய கட்டட திறப்பு விழாவில் வேலணை பிரதேச சபை தவிளார் புறக்கணிக்கப்பட்டுள்ளார்.

அந்நிகழ்வில் சுகாதார அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ, கடற்தொழில் அமைச்சர் நாடாளுமன்ற உறுப்பினர்களான ஶ்ரீபவானந்தராசா, க. இளங்குமரன் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.

இந்நிலையில், யாழ். மானிப்பாய் இந்துக் கல்லூரியில் முத்தமிழ் வித்தகர் சுவாமி விபுலானந்தரின் துறவற நூற்றாண்டு விழா இன்றைய தினம் மானிப்பாய் பிரதேச சபையின் தவிசாளர் புறக்கணிக்கப்பட்டுள்ளார்.

அதனால் குறித்த நிகழ்வை புறக்கணித்து மானிப்பாய் பிரதேச சபையின் தவிசாளரும், உறுப்பினர்களும் நிகழ்வில் இருந்து வெளியேறினர்.

இந்த நிகழ்வில் பாராளுமன்ற சபாநாயகர் டாக்டர் ஜகத் விக்கிரமரத்ன, தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.

அதேவேளை யாழ். மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்திலும், தவிசாளர்களுக்கு இட ஒதுக்கீடுகள் உரிய முறையில் ஒதுக்கப்பட்டவில்லை. இது தொடர்பில் கூட்டத்தில் விசனம் தெரிவித்த போது அடுத்த கூட்டத்தில் உரிய இட ஒதுக்கீடு செய்து தருவதாக ஒருங்கிணைப்புக்குழுவின் தலைவர் அமைச்சர் இராமலிங்கம் சந்திரகேகரர் தெரிவித்திருந்தார்.

பிரதேசங்களில் முன்னெடுக்கப்படும் அபிவிருத்தி திட்டங்கள், நிகழ்வுகளில் அப்பிரதேச தவிசாளர்களை புறக்கணித்து மத்திய அரசாங்கம் நேரடியாக தலையீடு செய்வது தொடர்பில் கடும் விசனம் எழுந்துள்ளது.

முந்தைய செய்தி மாநகரசபை அரசியல் பழிவாங்கலில் தொழில் செய்ய இடையூறு – உறுப்பினர் குற்றச்சாட்டு
அடுத்த செய்தி முத்தமிழ் வித்தகரின் நூற்றாண்டு விழா

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்கியூபெக்

சர்வதேச அளவில் அங்கீகாரம் கோரும் கியூபெக் பால் உற்பத்தித் துறை

மார்ச் 6, 2026
இலங்கை

முன்னாள் ஜனாதிபதியிடம் இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழு விசாரணை!

அக்டோபர் 13, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

ஓய்வில் இருந்தாலும் தேவையின்போது வருவேன் – ரணில்

மார்ச் 7, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

நல்லூர் திருவிழாவை முன்னிட்டு யாழில் இடம்பெற்ற கர்நாடக இசை நிகழ்வு

ஆகஸ்ட் 20, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?