உலகில் அதிக அளவில் நில அதிர்வால் பாதிக்கப்படும் நாடுகளில் பிலிப்பைன்ஸும் ஒன்றாகும். இன்றைய தினம் பிலிப்பைன்ஸின் மின்டானோ பகுதியில் 6.1 ரிக்டர் அளவுகோலில் நிலா அதிர்வானது பதிவாகியுள்ளதாக பிலிப்பைன்ஸ் எரிமலையியல் மற்றும் நில அதிர்வு ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது
இந்நிலையில் டாவோ ஆக்ஸிடென்டல் மாகாணத்திலிருந்து சுமார் 70 கி.மீ தொலைவில் 101 கி.மீ ஆழத்தில் நில அதிர்வு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த நில அதிர்வினால் எந்தவொரு சுனாமி எச்சரிக்கையும் விடுக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
