பங்களாதேஷுக்கு எதிரான தனது 119வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியில் விளையாடிவரும் மெத்யூஸின் ஓய்வு குறித்து இந்திய அணியின் முன்னாள் தலைவர் ரோஹித் சர்மா வாழ்த்துச்செய்தியொன்றை பகிர்ந்துள்ளார்.
உங்கள் அற்புதமான வாழ்க்கைக்கு வாழ்த்துக்கள். பல ஆண்டுகளாக எங்கள் 19 வயதுக்குட்பட்ட நாட்களில் இருந்து சில நல்ல போட்டிகளை நாங்கள் சந்தித்துள்ளோம்.
நீங்கள் உங்கள் நாட்டிற்கு ஒரு உண்மையான சேவையாளராக இருந்து வருகிறீர்கள், மேலும் உங்கள் நாட்டிற்காக நீங்கள் செய்ததை வீட்டில் உள்ள அனைவரும் பாராட்டுவார்கள் என்று நான் நம்புகிறேன்,” என்று ரோஹித் கூறினார்.
சிவப்பு பந்து விளையாட்டிலிருந்து விடைபெறும் அதே வேளையில், 2026 டி20 உலகக்கிண்ணத்திற்கு பிறகு ஓய்வு பெறுவதை நோக்கமாகக் கொண்டு, வெள்ளை பந்து கிரிக்கெட்டில் தொடர திட்டமிட்டுள்ளதாக மெத்யூஸ் உறுதிப்படுத்தியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
