பாடசாலை வளாகங்களில் டெங்கு மற்றும் சிக்குன்குனியா நோய்த் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வது தொடர்பில் கல்வி அமைச்சு வர்த்தமானி அறிவித்தலை வெளியிட்டுள்ளது.
எனவே, நுளம்புகளற்ற பாதுகாப்பான பாடசாலை வளாகங்களை பராமரிப்பதற்காக ஏற்கனவே வெளியிடப்பட்ட ஆலோசனைகளுக்கு மேலதிகமாக முன்னெடுக்கப்பட வேண்டிய நடைமுறைகள் மற்றும் ஆலோசனைகள் தொடர்பில் வர்த்தமானியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மாணவர்கள், கல்வி மற்றும் கல்விசாரா ஊழியர்களின் சுகாதாரப் பாதுகாப்பிற்காக அந்த ஆலோசனைகளை பின்பற்றுமாறு அனைத்து அதிகாரிகளுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
