நடிகர் ஜீவா நடித்துள்ள ‘தகப்பன்’ திரைப்படத்தின் இரண்டாவது பாடலான ‘சொக்க வச்சாலே’ நாளை மாலை 5 மணிக்கு வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை நடிகர் ஜீவா தனது சமூக வலைத்தளப் பதிவின் ஊடாகப் பகிர்ந்துள்ளார்.
‘கிடா’ திரைப்படத்தை இயக்கிய இயக்குநர் ரா. வெங்கட் இப்படத்தை இயக்கியுள்ளார்.
‘கருடன்’ மற்றும் ‘மாமன்’ ஆகிய படங்களைத் தயாரித்த லார்க் ஸ்டூடியோஸ் நிறுவனம் இத்திரைப்படத்தைத் தயாரித்துள்ளது.
ஜீவா மற்றும் ரஜிஷா விஜயன் ஆகியோர் முதன்மைப் பாத்திரங்களில் நடித்துள்ள இப்படத்திற்கு மார்ஷல் ராபின்சன் இசையமைத்துள்ளார்.
ஏற்கெனவே இத்திரைப்படத்தின் முதல் பாடலான ‘தங்கப்புள்ள’ வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தது.
இதனைத் தொடர்ந்து இரண்டாவது பாடல் வெளியாகவுள்ள நிலையில், ‘தகப்பன்’ திரைப்படம் 2026 டிசம்பர் 24 ஆம் திகதி திரையரங்குகளில் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
