மொன்றியல் நகரின் மத்திய பகுதியில் வீதியில் திடீரென ஏற்பட்ட பாரிய பள்ளத்தில் கார் ஒன்று விழுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நேற்று இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
Place Jean-Paul-Riopelle பகுதிக்கு அருகில் இந்தப் பள்ளம் உருவாகியுள்ளது. வீதியின் ஒரு பகுதி திடீரென உள்வாங்கியதைத் தொடர்ந்து அந்த வழியாகச் சென்ற கார் பள்ளத்திற்குள் விழுந்துள்ளது.
இந்தச் சம்பவத்தில் எவருக்கும் காயம் ஏற்படவில்லை என ஆரம்பகட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
இருப்பினும், நகரின் மத்திய பகுதியில் இவ்வாறான பாரிய பள்ளம் உருவானமை அப்பகுதியில் வீதிப் பாதுகாப்பு மற்றும் நிலத்தடி உட்கட்டமைப்பு தொடர்பான கேள்விகளை எழுப்பியுள்ளது.
