கொழும்பு மாஸ்அரினா குத்துச்சண்டை உள்ளக அரங்கில் நடைபெற்ற 50 ஆவது தேசிய விளையாட்டு விழாவின் குத்துச்சண்டைப் போட்டியில், வவுனியா மாவட்டத்தைச் சேர்ந்த எல். கஜேந்தினி தங்கப் பதக்கம் வென்று வவுனியா மண்ணிற்குப் பெருமை சேர்த்துள்ளார்.
இப்போட்டிகளில் வட மாகாண அணி சார்பாகக் களம் இறங்கிய வீராங்கனைகள் மொத்தம் 1 தங்கம், 1 வெள்ளி மற்றும் 5 வெண்கலப் பதக்கங்களைக் கைப்பற்றினர்.
இதில் வட மாகாணத்திற்கான ஒரே ஒரு தங்கப் பதக்கத்தை வவுனியா வீராங்கனை வென்று கொடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இப்போட்டியில் வவுனியா மாவட்டம் 2 பதக்கங்களையும், முல்லைத்தீவு மாவட்டம் 1 வெள்ளி மற்றும் 3 வெண்கலப் பதக்கங்களையும், மன்னார் மாவட்டம் 1 வெண்கலப் பதக்கத்தையும் வென்று மாகாணத்திற்குப் பெருமை சேர்த்துள்ளன.
தேசிய அரங்கில் தங்கப் பதக்கம் வென்று சாதனை படைத்த வவுனியா வீராங்கனை எல். கஜேந்தினி, வெண்கலப் பதக்கம் வென்ற எஸ். ஜனுப்பிரியா மற்றும் வட மாகாண அணி வீராங்கனைகளுக்குப் பல தரப்பினரும் தமது வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.
