முல்லைத்தீவு உடுப்புக்குளத்தைச் சேர்ந்த 53 வயதுடைய சண்முகம் இந்திரா என்ற தாய், மோட்டார் சைக்கிள் விபத்தில் படுகாயமடைந்து உயிரிழந்த நிலையில், அவரது இரண்டு சிறுநீரகங்களும் தானமாக வழங்கப்பட்டுள்ளன.
கடந்த 15ஆம் திகதி மாஞ்சோலைப் பகுதியில் மகனுடன் மோட்டார் சைக்கிளில் பயணித்தபோது தவறி விழுந்து தலையில் பலத்த காயமடைந்த அவர், யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் தீவிர சிகிச்சை பெற்றார். பின்னர் வவுனியா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார்.
இந்நிலையில் குடும்பத்தினரின் சம்மதத்துடன் அவரது இரண்டு சிறுநீரகங்களும் தானமாக வழங்கப்பட்டுள்ளதுடன், இதன் மூலம் இரண்டு நோயாளிகளுக்கு மறுவாழ்வுக்கான வாய்ப்பு கிடைத்துள்ளது.
ஒரு குடும்பத்திற்கு ஈடுசெய்ய முடியாத இழப்பை ஏற்படுத்திய இந்தச் சம்பவம், மற்றொரு புறத்தில் இரண்டு உயிர்களுக்கு புதிய நம்பிக்கையை வழங்கியுள்ளது.
உடலுறுப்பு தானத்தின் முக்கியத்துவத்தை உணர்த்தும் இந்தச் சம்பவம், வீதிப் பாதுகாப்பு மற்றும் மோட்டார் சைக்கிள் பயணங்களின்போது தலைக்கவசம் அணிவதன் அவசியத்தையும் நினைவூட்டுகின்றமை குறிப்பிடத்தக்கது.

