Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
இந்தியா

தெருவோர வியாபாரிகளின் கஷ்டங்களைப் புரிந்துகொள்ள வேண்டும்: சிஜேபிக்கு உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல்!

அக்டோபர் 16, 2026
படிக்க 2 நிமிடங்கள்
SHARE

தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலகக் கோரி காக்ரோச் ஜனதா கட்சியினர் (சிஜேபி) போராட்டத்தில் ஈடுபட்டுவரும் சூழலில், சிறு வணிகர்கள் மற்றும் தினக்கூலி தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தைப் போராட்டம் நடத்தும் சிஜேபியினர் கருத்தில் கொள்ள வேண்டும் என உச்ச நீதிமன்றம் வலியுறுத்தியுள்ளது.

தலைமைத் தேர்தல் ஆணையர் பதவி விலக வலியுறுத்தி சிஜேபி போராட்டத்தில் ஈடுபட முயன்றபோது, அக்கட்சியின் முக்கிய நிர்வாகிகளான செளரவ் தாஸ் மற்றும் அஷூதோஷ் ரங்கா ஆகியோர் கைது செய்யப்பட்டு ஐந்து நாட்கள் நீதிமன்றக் காவலில் அடைக்கப்பட்டனர். அதனைத் தொடர்ந்து, டெல்லி சென்ட்ரல் பார்க்கில் தேசிய கொடியுடன் சிஜேபி ஆதரவாளர்கள் கூடுமாறு அக்கட்சியின் தலைவர் அபிஜீத் தீப்கே அழைப்பு விடுத்திருந்தார்.

சிஜேபி அறிவித்த போராட்டத்திற்கு எதிராக வர்த்தகர்கள் சங்கம் சார்பில் வழக்கறிஞர் ஜெய் அனந்த் தேஹத்ராய் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். கன்னாட் பிளேஸைச் சுற்றியுள்ள பகுதிகளில் ஏற்படும் இடையூறுகளால் ஒரு நாளைக்கு ரூபாய் 250 கோடிக்கும் அதிகமான இழப்பு ஏற்படுவதாக அவர் தனது மனுவில் குறிப்பிட்டிருந்தார். வியாழக்கிழமை இரவு தாமதமாக சென்ட்ரல் பார்க்கை மூட உத்தரவிட்டு புது தில்லி மாநகராட்சி (NDMC) வெளியிட்ட அறிவிப்பையும் அவர் சுட்டிக்காட்டியதுடன், இந்தக் கட்டுப்பாடுகள் அப்பகுதியில் உள்ள வர்த்தகர்களையும் தினக்கூலி தொழிலாளர்களையும் பாதிக்கக்கூடும் என்றும் வாதிட்டார்.

இந்த மனு தலைமை நீதிபதி சூர்ய காந்த் மற்றும் நீதிபதி ஜாய்மால்யா பாக்சி ஆகியோர் அடங்கிய அமர்வின் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது பேசிய நீதிமன்றம், வர்த்தகர்கள் மற்றும் தெருவோர வியாபாரிகளின் நலன்களைக் கருத்தில் கொண்டு, போராட்டக்காரர்கள் வேறு ஒரு வழியைக் கண்டுபிடிப்பார்கள் எனத் தாங்கள் நம்புவதாகத் தெரிவித்தது. மேலும், போராடங்கள் தொடர்பான கட்டுப்பாடுகளால் வணிகர்களின் வாழ்வாதாரங்கள் பாதிக்கப்பட்டால் இழப்பீடு வழங்க நேரிடும் எனவும் நீதிமன்றம் எச்சரித்தது.

“அனைவருக்கும் நல்லறிவு மேலோங்கும் என நம்புகிறோம். சிறு கடைக்காரர்கள்தான் இந்த நாட்களில் தங்கள் வாழ்வாதாரத்தை ஈட்டுகிறார்கள். ஒட்டுமொத்த குடும்பங்களும் எதிர்கொள்ளும் கஷ்டங்களையும், சிரமங்களையும், நெருக்கடிகளையும் நாங்கள் அறிவோம்” என்று தலைமை நீதிபதி தெரிவித்தார்.

மேலும், வியாபார இழப்பு ஏற்பட்டால் சிவில் வழக்கு அதிகார வரம்பின் கீழ் தங்கள் அதிகாரத்தைப் பயன்படுத்துவோம் எனவும் நீதிமன்றம் எச்சரித்துள்ளது.

இந்த வழக்கு மீதான அடுத்தகட்ட விசாரணை தசரா விடுமுறைக்குப் பிறகு, அக்டோபர் 26 அல்லது 27 ஆகிய தேதிகளில் நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முந்தைய செய்தி பினராயி விஜயனுக்கு அமலாக்கத்துறை அழைப்பாணை!
அடுத்த செய்தி தவெக மாவட்ட நிர்வாகியிடம் 135 கிலோ போதைப்பொருள் பறிமுதல்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
சனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்இந்தியா

கச்சத்தீவை மீட்கும் மு.க ஸ்டாலினின் தனிநபர் பிரேரணை ஒருமனதாக நிறைவேற்றம்

ஏப்ரல் 2, 2025
இந்தியா

இலங்கை பொருளாதார உச்சிமாநாட்டில் இந்திய வணிகக் குழுக்கள்!

அக்டோபர் 15, 2026
இந்தியா

மாவட்ட நீதிபதிகளின் ஓய்வு பெறும் வயது 62 ஆக உயர்வு: உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு

செப்டம்பர் 5, 2026
அண்மைய செய்திகள்இந்தியா

தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்க்கு ‘Y’ பிரிவு பாதுகாப்பு ஏன்? – அண்ணாமலை விளக்கம்..!!

பிப்ரவரி 14, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
imunify-bot-check
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?