Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
அண்மைய செய்திகள்இலங்கை

பிள்ளையான் உள்ளிட்ட மூவருக்கு ஒக்டோபர் 27 வரை விளக்கமறியல்

அக்டோபர் 13, 2026
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

மட்டக்களப்பில் 2008ஆம் ஆண்டு இடம்பெற்ற ஐந்து கொலைச் சம்பவங்கள் தொடர்பாகக் கைது செய்யப்பட்ட முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் எனப்படும் பிள்ளையான் உள்ளிட்ட மூவரையும் எதிர்வரும் ஒக்டோபர் 27ஆம் திகதி வரை தொடர்ந்து விளக்கமறியலில் வைக்குமாறு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதவான் அண்ணாத்துரை தஷ்ஷினி, இன்று செவ்வாய்க்கிழமை (13) காணொளி ஊடாக பிள்ளையான் உட்பட மூவரையும் ஆஜர்படுத்தியதைத் தொடர்ந்து இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.

குறித்த கொலைச் சம்பவங்கள் 2008ஆம் ஆண்டு மட்டக்களப்பு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இடம்பெற்றுள்ளன. கல்லடியில் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் உட்பட இருவர் சுட்டுக் கொல்லப்பட்டதுடன், காத்தான்குடியில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் உறுப்பினர் உட்பட இருவர் சுட்டுக் கொல்லப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.

மேலும், வவுணதீவு கரையாக்கன்தீவு பகுதியைச் சேர்ந்த வர்த்தகர் ஒருவர் கடத்தப்பட்டு கொடூரமாகக் கொலை செய்யப்பட்ட சம்பவமும் இந்த வழக்குடன் தொடர்புபடுத்தப்பட்டுள்ளது.

இந்தச் சம்பவங்கள் தொடர்பாகப் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் 2025ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் பிள்ளையான் கைது செய்யப்பட்டார். தொடர்ந்து, காத்தான்குடியைச் சேர்ந்த இராணுவப் புலனாய்வுப் பிரிவின் தகவலாளிகளான முகமட் சிபான் மற்றும் முகமட் சகீத் ஆகியோரை குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினர் 2025ஆம் ஆண்டு நவம்பர் மாதம் கைது செய்தனர்.

இந்த ஐந்து கொலைச் சம்பவங்கள் தொடர்பாகப் பிள்ளையான் உள்ளிட்ட சந்தேகநபர்களுக்கு எதிராக 2026ஆம் ஆண்டு ஜூன் 17ஆம் திகதி மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இன்றைய விசாரணையின்போது முகமட் சிபான் மற்றும் முகமட் சகீத் ஆகியோர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். பிள்ளையான் காணொளி ஊடாக ஆஜர்படுத்தப்பட்டார்.

இதனையடுத்து, பிள்ளையான் உள்ளிட்ட மூவரையும் ஒக்டோபர் 27ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.

இதேவேளை, லண்டனில் இருப்பதாகக் கூறப்படும் மற்றொரு சந்தேகநபரான முகமட் பாய்ஸ் என்றழைக்கப்படும் பொலிஸ் பாயிஸுக்கு எதிராகத் தொடர்ந்து பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

முந்தைய செய்தி யாழில். இடம்பெற்ற விபத்தில் இரு இளைஞர்கள் உயிரிழப்பு
அடுத்த செய்தி டிரைடென்ட் ஆர்ட்ஸுடன் மீண்டும் இணையும் நடிகர் சசிகுமார்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

இலங்கை

நல்லூர் தவிசாளர் மீது கடற்தொழில் அமைச்சர் குற்றச்சாட்டு!

டிசம்பர் 3, 2025
இலங்கை

கிழக்கு மாகாணத்தில் கடவுச்சீட்டு அலுவலகம் ஆரம்பிக்கப்பட வேண்டும் – ஹிஸ்புல்லாஹ் எம்.பி கோரிக்கை

பிப்ரவரி 3, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

செம்மணி சித்துபாத்தி மாயான பகுதியை மனித புதைகுழியாக பிரகடனப்படுத்த கோரிய வழக்கு – வெள்ளிக்கிழமை கட்டளை!

ஜூன் 4, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

மாவனெல்லை மா ஓயாவில் 15 வயது சிறுவன் உயிரிழப்பு

மே 10, 2026
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
imunify-bot-check
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?