இயக்குநர் நெல்சன் இயக்கத்தில், நடிகர் ரஜினிகாந்த் முதன்மை வேடத்தில் நடித்து வரும் ‘ஜெயிலர் 2’ திரைப்படத்தின் இரண்டாவது பாடல் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது.
சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் இத்திரைப்படத்திற்கு அனிருத் ரவிச்சந்தர் இசையமைத்துள்ளார்.
முன்னதாக இப்படத்தின் முதலாவது பாடல் வெளியாகி ரசிகர்களிடையே அமோக வரவேற்பைப் பெற்றிருந்த நிலையில், தற்போது ‘ஒன் சன் ஒன் மூன்’ (One Sun One Moon) என்ற வரிகளுடன் கூடிய இரண்டாவது பாடல் வெளியாகியுள்ளது.
‘இன்னைக்கு என்னைக்கு ஒரு தலைவன்தான்’ எனும் பாணியில் அனிருத்தின் அதிரடி இசையில் உருவாகியுள்ள இப்பாடல், வெளியான குறுகிய நேரத்திலேயே இணையத்தளங்கள் மற்றும் சமூக ஊடகப் பக்கங்களில் வைரலாகி வருகிறது.
இத்திரைப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் சூழலில், தற்போது வெளியாகியுள்ள இந்த பாடல் யூடியூப் தளத்தில் அதிக பார்வைகளைப் பெற்று டிரெண்டிங்கில் இடம் பிடித்துள்ளது.


