இலங்கையில் கனமழை பெய்து வருவதால் மத்திய மலைநாட்டின் ஹட்டன் கொழும்பு பிரதான வீதியின் குயில்வத்தை பகுதியில் மண்சரிவு ஏற்பட்டுள்ளது.
குறித்த மண்சரிவால் அப்பகுதியூடான போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இந்த மண்ணை அகற்றுவதட்கான நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருவதாக நோர்வூட் வீதி அபிவிருத்தி அதிகார சபை அலுவலகம் தெரிவித்துள்ளது.


