Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
அண்மைய செய்திகள்இலங்கை

கீரிமலையில் கொட்டப்பட்ட புற்றுநோய் மருத்துவ கழிவுகள்

செப்டம்பர் 18, 2026
படிக்க 2 நிமிடங்கள்
SHARE

பல எதிர்ப்புக்களையும் மீறி கீரிமலை பகுதியில் தொடர்ச்சியாக குப்பைகள் கொட்டப்பட்டு வரும் நிலையில், இன்றைய தினம் வெள்ளிக்கிழமை மாலை , குறித்த பகுதியில் தெல்லிப்பழை புற்றுநோய் வைத்தியசாலையின் பெருமளவான ஆபத்தான மருத்துவ கழிவுகள் கொட்டப்பட்டுள்ளன.

கீரிமலை பகுதியில் கட்டுப்பாடின்றி , எவ்வித அனுமதிகளும் இன்றி சுமார் 300 டிப்பர் கழிவுகள் கொட்டப்பட்டுள்ள நிலையில் கடந்த இரண்டு மாத காலத்திற்கு மேலாக வலி. வடக்கு பிரதேச சபை உறுப்பினர்கள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

அந்நிலையில் கடந்த செவ்வாய்க்கிழமை தெல்லிப்பழை பிரதேச ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் குறித்த விடயம் பிரஸ்தாபிக்கப்பட்ட போது, ஒருங்கிணைப்பு குழு தலைவரான நாடாளுமன்ற உறுப்பினர் ச. சிறிபவானந்தராசா , வலி. வடக்கு பிரதேச சபை தவிசாளருக்கு கொட்டப்பட்ட கழிவுகளை மாத இறுதிக்குள் மீள அள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும் என பணித்திருந்தார்.

அத்துடன் வலி. வடக்கு பிரதேச சபையினரும் அப்பகுதிகளில் கழிவுகளை கொட்ட கூடாது என கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.

அவ்வாறான நிலையில் , நேற்றைய தினம் வியாழக்கிழமை சபையின் மாதாந்த கூட்டத்தை சபையின் பெரும்பாலான உறுப்பினர்கள் புறக்கணித்து , கீரிமலையில் கொட்டப்பட்ட குப்பைகள் மீள அள்ளப்பட வேண்டும் என வலியுறுத்தினர்.

அதேவேளை நேற்றைய தினம் உள்ளூராட்சி ஆணையாளர் , மத்திய சுற்றாடல் அதிகார சபை அதிகாரிகள் , வலி.தெற்கு பிரதேச சபை சுகாதார பரிசோதகர் உள்ளிட்டவர்கள் , வலி. வடக்கு பிரதேச சபையின் உறுப்பினர்களுடன் இணைந்து குப்பைகள் கொட்டப்பட்ட இடங்களுக்கு நேரில் சென்று பார்வையிட்டு , அவற்றை உடனடியாக வலி. தெற்கு பிரதேச சபையினர் மீள அள்ள வேண்டும் என உத்தரவிட்டனர்.

இந்நிலையில் , வலி. வடக்கு பிரதேச சபைக்கு சொந்தமான உழவு இயந்திரத்தில் தெல்லிப்பழை புற்றுநோய் வைத்தியசாலையின் ஆபத்தான வைத்திய கழிவுகள் பெருமளவில் கொண்டு வந்து கொட்டப்பட்டுள்ளன.

இது தொடர்பில் பிரதேச சபை உறுப்பினர்களுக்கு அப்பகுதி மக்கள் அறிவித்ததை அடுத்து , சம்பவ இடத்திற்கு உறுப்பினர்கள் சென்று பார்வையிட்ட போது பெருமளவான மருத்துவ கழிவுகள் பொதி செய்யப்பட்ட நிலையில் அங்கு கொட்டப்பட்டுள்ளதனை அவதானித்துள்ளனர்.

இது தொடர்பில் உரிய தரப்பினருக்கு புகைப்பட மற்றும் ஒளிப்பட ஆதாரங்களுடன் முறையிட்டுள்ளனர்.

கழிவுகளை இப்பகுதியில் கொட்ட வேண்டாம் என கடந்த இரு மாதங்களாக தாம் குரல் கொடுத்து வரும் நிலையிலும் , பிரதேச ஒருங்கிணைப்பு குழுவில் கழிவுகள் அள்ள பட வேண்டும் என தீர்மானிக்கப்பட்டு , உள்ளூராட்சி ஆணையாளர் கழிவுகளை அள்ள உத்தரவிட்டுள்ள நிலையில், அவற்றையெல்லாம் மீறி வலி. வடக்கு பிரதேச சபையினர் ஆபத்தான மருத்துவ கழிவுகளை கொட்டி சென்றுள்ளமை படுமோசமான செயற்பாடு என வலி. வடக்கு பிரதேச உறுப்பினர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

முந்தைய செய்தி வருடாந்த மாவட்ட மாணவர் தூதுவர் மாநாடு – 2026
அடுத்த செய்தி தெல்லிப்பழை வைத்தியசாலைக்கு விஜயம் செய்த அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸ

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
சனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்

எம்மவர் நிகழ்வுகள்

AADALAM VAA 3

செம்மண் இரவு

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

இலங்கை

உடைக்கப்பட்ட அணையா விளக்கு தூபி புனரமைப்புப் பணிகள் ஆரம்பம்!

அக்டோபர் 9, 2025
இலங்கை

நிலங்களை மீட்டெடுக்கப் போராடும் மக்களுக்கு ஆதரவு தெரிவித்து, மன்னாரில் நாளை ஜனநாயக கவனயீர்ப்புப் போராட்டம்

ஆகஸ்ட் 6, 2026
இலங்கை

நெல்லின் விலை குறைவடைந்துள்ளது.

பிப்ரவரி 3, 2025
அண்மைய செய்திகள்கனடா

நிழல் அமைச்சரவையில் அதிரடி மாற்றம்: கன்சர்வேட்டிவ் கட்சியின் நிதித்துறை விமர்சகராக மைக்கேல் சாங் நியமனம்!

ஜூலை 2, 2026
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?