Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
இலங்கை

தையிட்டி பவானி வீதியினை விடுவிக்க பொலிஸார் ஒத்துழைக்க வேண்டும் – தெல்லிப்பழை ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் தீர்மானம்!

செப்டம்பர் 15, 2026
படிக்க 2 நிமிடங்கள்
SHARE
தையிட்டி சட்டவிரோத விகாரை வளாகத்தினுள் கையகப்படுத்தப்பட்டுள்ள வலி. வடக்கு பிரதேச சபைக்கு சொந்தமான பவானி வீதியினை விடுவிக்க பொலிஸார் பிரதேச சபையினருக்கு ஒத்துழைப்பை வழங்க வேண்டும் என தெல்லிப்பழை பிரதேச ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

தெல்லிப்பழை பிரதேச ஒருங்கிணைப்பு குழு கூட்டம்  இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் , ஒருங்கிணைப்பு குழு தலைவரான நாடாளுமன்ற உறுப்பினர் ச. சிறிபவானந்தராசா தலைமையில் நடைபெற்றது.
கூட்டத்தில் , தையிட்டி விகாரைக்காக கையகப்படுத்தப்பட்ட காணிகளை உரிமையாளர்களிடம் மீள ஒப்படைப்பது தொடர்பான நடவடிக்கை எந்தளவில் தற்போது காணப்படுகிறது ? என நாடாளுமன்ற உறுப்பினர் அருச்சுனா இராமநாதன் கேள்வி எழுப்பினார்.
அதற்கு ஒருங்கிணைப்பு குழு தலைவர் , அது தொடர்பில் ஜனாதிபதி தலைமையில் விசேட குழு உருவாக்கப்பட்டு , அந்த குழு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது என பதில் அளித்தார்.
அதன் போது, விகாரை அமைந்துள்ள பகுதியில் கையகப்படுத்தப்பட்டுள்ள பிரதேச சபைக்கு சொந்தமான பவானி வீதியினை விடுவிக்க பொலிஸார் ஒத்துழைக்க வேண்டும் என்றும் , நீதிமன்றில் குறித்த வீதியை விடுவிக்குமாறு கட்டளையிடப்பட்டுள்ள நிலையில் ஏன் காலதாமதம் என மீண்டும் அருச்சுனா இராமநாதன் கேள்வி எழுப்பினார்.
அதற்கு ஒருங்கிணைப்பு குழு தலைவர் , நீதிமன்ற கட்டளையை நடைமுறைபப்டுத்த பொலிஸார் ஒத்துழைக்க வேண்டும். அதற்கு பலாலி பொலிஸார் ஒத்துழைக்கவில்லை எனில் , வடமாகாண மூத்த பிரதி பொலிஸ்மா அதிபர் உள்ளிட்ட உயர் பொலிஸ் அதிகாரிகள்  பிரதேச சபை தவிசாளர் உள்ளிட்ட தரப்பினரை ஒன்றிணைத்து கூட்டம் ஒன்றினை நடாத்தி , எவ்வாறு வீதியினை விடுவிக்க நடவடிக்கை எடுப்பது என தீர்மானிப்போம் என தெரிவித்தார்
பொலிசாரை அழைத்து கூட்டம் கூடுவதற்கு, நாடாளுமன்ற உறுப்பினர்களான அருச்சுனா இராமநாதன் மற்றும்  கஜேந்திரகுமார் பொன்னம்பலம் ஆகியோர் எதிர்ப்பு தெரிவித்தனர்.
பிரதேச சபைக்கு சொந்தமான வீதியினை விடுவிக்குமாறு நீதிமன்றமும் கட்டளையிட்டுள்ளது. அதனால் நீதிமன்ற கட்டளையை நடைமுறைப்படுத்த பொலிஸார் ஒத்துழைக்க வேண்டும். இங்கே வீதியினை விடுவிக்க பிரதேச சபை நடவடிக்கை எடுக்க கூடாது என வழக்கு தொடர்ந்ததே பலாலி பொலிஸார் தான். அதனால் , அவர்கள் நீதிமன்ற கட்டளையை நடைமுறைப்படுத்த பின்னடிக்கலாம்.
ஆகவே வீதியினை விடுவிக்க நீதிமன்றம் வழங்கிய கட்டளையை பிரதேச சபை நடைமுறைப்படுத்தும் போது, அதற்கு பொலிஸார் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என பிரதேச ஒருங்கிணைப்பு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றி , அதனை பொலிஸ் உயர் அதிகாரிகள் உள்ளிட்ட உரிய தரப்பினர்களுக்கு வழங்க நடவடிக்கை எடுங்கள் என கோரினார்கள்.
அதனை ஏற்றுக்கொண்ட நாடாளுமன்ற உறுப்பினர் ச. பவானந்தராசா , ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் எடுக்கப்பட்ட இந்த தீர்மானத்தை பொலிஸார் உள்ளிட்ட தரப்பினருக்கு அனுப்பி வைக்குமாறு கூறினார்.
முந்தைய செய்தி சங்கு கூட்டணியின் வவுனியா மாவட்ட இணைப்பாளர் பதவியில் இருந்து செந்தில்நாதன் மயூரன் விலகினார்.
அடுத்த செய்தி கொலைகள் முதல் துப்பாக்கிச் சூடுகள் வரை: இலங்கையின் 2026 குற்ற நிலவரம்!

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்

எம்மவர் நிகழ்வுகள்

செம்மண் இரவு

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

இலங்கை

திருகோணமலை பிரச்சினை தொடர்பாக தெளிவுபடுத்திய ‘பா.உ கதிரவேலு சண்முகம்’ குகதாசன்

நவம்பர் 21, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

அரச ஊழியர்களுக்கு சம்பள உயர்வு பிமல் ரத்நாயக்க தெரிவிப்பு!

செப்டம்பர் 20, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

விவசாயிகள் நீரை சிக்கனமாக பயன்படுதுங்கள் – தம்பிராஜா

ஏப்ரல் 6, 2026
இலங்கை

சுப்ரீம் செட் திட்டம் தொடர்பாக வழங்கப்பட்ட பிழையான தகவல் தொடர்பில் விசாரணை!

ஆகஸ்ட் 13, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?