Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
இந்தியா

தமிழகத்தில் H1N1 பன்றிக்காய்ச்சல் : சுகாதாரத்துறை வெளியிட்ட அவசர எச்சரிக்கை

ஆகஸ்ட் 26, 2026
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

தமிழகத்தில் பருவமழை தீவிரமடைவதற்கு முன்பாகவே எச்1என்1 (H1N1) வகையைச் சேர்ந்த பன்றிக்காய்ச்சல் நோய் தொற்று அதிவேகமாகப் பரவி வருகிறது.

தலைநகர் டெல்லியைத் தொடர்ந்து தற்போது தமிழகத்திலும் இதன் தாக்கம் அதிகரித்து வருவதால், பொது சுகாதாரத்துறை மற்றும் மத்திய சுகாதாரத்துறை சார்பில் முக்கிய எச்சரிக்கைகளும் அவசர வழிகாட்டுதல்களும் வெளியிடப்பட்டுள்ளன.

கடந்த ஜனவரி மாதத்தில் 19 ஆக இருந்த பன்றிக்காய்ச்சல் பாதிப்பு எண்ணிக்கை, தற்போது 339 ஆக அதிர்ச்சி தரும் வகையில் உயர்ந்துள்ளது.

இதன் காரணமாக மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் காய்ச்சல் வார்டுகளில் நோயாளிகளின் கூட்டம் கணிசமாக அதிகரித்து வருகிறது.

காய்ச்சல், இருமல், தொண்டை வலி, மூக்கு ஒழுகுதல், கடுமையான தலைவலி, உடற்சோர்வு மற்றும் பசியின்மை ஆகியவை இதன் முதன்மை அறிகுறிகளாக அடையாளம் காணப்பட்டுள்ளன.

லேசான சளி அல்லது காய்ச்சல் அறிகுறிகள் தென்பட்டால் பொதுமக்கள் அதனை அலட்சியப்படுத்தக் கூடாது எனச் சுகாதாரத்துறை கேட்டுக்கொண்டுள்ளது.

முக்கியமாக, மருந்தகங்களில் தானாகச் சென்று மருந்துகளை வாங்கி உட்கொள்ளும் சுய மருத்துவ முறையைக் கண்டிப்பாகத் தவிர்க்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அறிகுறிகள் தென்பட்ட உடனடியாக அருகில் உள்ள சுகாதார மையங்களை அணுகி உரிய மருத்துவப் பரிசோதனைகளை மேற்கொள்வதே நோய்த்தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்த உதவும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

முந்தைய செய்தி இந்திய மத்திய அமைச்சரவையில் புதுமுகங்களுக்கு வாய்ப்பளிக்க திட்டம்
அடுத்த செய்தி ஜி.வி. பிரகாஷின் ‘இம்மார்டல்’: டிரெய்லர் வெளியீடு

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளி

எம்மவர் நிகழ்வுகள்

MEGA BLAST

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

இந்தியா

இந்தியர்கள் ஈரானுக்குப் பயணம் செய்ய வேண்டாம் – இந்திய அரசு எச்சரிக்கை

ஏப்ரல் 24, 2026
இந்தியா

இந்தியா, இத்தாலி இணைந்து செயல்படுவதற்கான காரணம் இதுதான்-வெளியுறவுத்துறை அமைச்சர்

டிசம்பர் 11, 2025
அண்மைய செய்திகள்இந்தியா

பஹல்காம் தாக்குதலோடு தொடர்புடைய பாகிஸ்தான் இராணுவ முன்னாள் தளபதி…

ஏப்ரல் 29, 2025
இந்தியா

வாட்ஸ்அப் மூலம் ‘டிஜிட்டல் கைது’: ரூ.2.5 கோடி இழந்த ஓய்வுபெற்ற நீதிபதி

ஆகஸ்ட் 13, 2026
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?