Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
அண்மைய செய்திகள்இலங்கை

வவுனியாவில் 16 பவுண் நகையை கொள்ளையடித்த நால்வர் கைது!

ஆகஸ்ட் 24, 2026
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

வவுனியாவில் வீடொன்றிற்குள் நுழைந்து அங்கு வைக்கப்பட்டிருந்த 16.750 பவுண் நகைகளை கொள்ளையிட்ட குற்றச்சாட்டில் நான்கு பேரை வவுனியா குற்றத்தடுப்பு பொலிசார் கைதுசெய்துள்ளனர்.

குறித்த சம்பவம் தொடர்பாக பொலிசார் மேலும் தெரிவித்ததாவது,

கடந்த 20ஆம் திகதி வவுனியா, தேக்கவத்தை பகுதியில் உள்ள வீடு ஒன்றிற்குள் நுளைந்து வீட்டின் அலுமாரியில் வைக்கப்பட்டிருந்த சுமார் 16.750 பவுண் தங்கநகை கொள்ளையிடப்பட்டிருந்தது.

இது தொடர்பாக வவுனியா தலைமை பொலிஸ்நிலைய குற்றத்தடுப்பு பொலிசாருக்கு முறைப்பாடு வழங்கப்பட்டிருந்தது. அதற்கமைய விசாரணைகளை முன்னெடுத்த பொலிசார் சம்பவத்துடன் தொடர்புடைய நான்கு பேரை கைதுசெய்துள்ளதுடன் அவர்களிடமிருந்து கொள்ளையிடப்பட்ட 14 பவுண் நகைகளையும் கைப்பற்றியுள்ளனர்.

சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான குற்றவாளி கொள்ளையிடப்பட்ட வீட்டிற்கு அருகில் வசிப்பவர் என பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

குறித்த நபர் கொள்ளையிட்ட ஒருபகுதி நகைகளை யாழில் அமைந்துள்ள வீட்டின் பின்புறத்தில் புதைத்து வைத்துள்ளார். மேலும் ஒரு தொகுதி நகைகள் வவுனியா கடைவீதியில் அமைந்துள்ள பிரபல அடகுநிலையத்தில் அடமானம் வைக்கப்பட்ட நிலையில் மீட்கப்பட்டதாக பொலிசார் தெரிவித்தனர்.

குறித்த நகைகளின் பெறுமதி 57 இலட்சத்து 91 ஆயிரம் என பொலிசார் தெரிவித்துள்ளதுடன் கைதுசெய்யப்பட்ட நான்குபேரும் இன்றையதினம் வவுனியா நீதவான் நீதிமன்றில் முற்படுத்தவுள்ளதாக தெரிவித்தனர்.

இக் கைது நடவடிக்கை வவுனியா தலைமை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஆர்.எம்.யே.எஸ்.ரத்னமலலா அவர்களின் வழிகாட்டலில் வவுனியா குற்றத்தடுப்பு பிரிவின் பொறுப்பதிகாரி லங்காசிங்கவின் தலைமையில் சாஜன்களான சந்தன,உடுவெல்ல, கான்ஸ்டபிள்களான உபாலி, கீதன், சம்பத் ஆகிய பொலிஸ் குழுவினரால் மேற்கொள்ளப்பட்டது.

முந்தைய செய்தி வலி.வடக்கு காணி விடுவிப்பு போராட்டத்திற்கு ஆதரவளித்த அரசியல் பிரதிநிதிகள்
அடுத்த செய்தி துன்னாலையில் 20 லீட்டர் கசிப்புடன் இருவர் கைது

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
சனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்இலங்கை

மட்டு நகரில் ஜஸ் போதைப் பொருளுடன் இளைஞர் ஒருவர் கைது

ஜூலை 20, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

யாழில் கஞ்சா கலந்த மாவா பாக்குடன் இருவர் கைது !

மார்ச் 30, 2025
அண்மைய செய்திகள்கியூபெக்

மொன்றியலில் கறுப்பினத்தவருக்கான பிரம்மாண்ட கலாசார மையமாகின்றது எக்கோல் டெஸ் பியூக்ஸ் – ஆர்ட்ஸ் கட்டடம்!

ஜூன் 1, 2026
1
இலங்கை

பெண்களின் திறமைக்கும் சேவைக்கும் உரிய அங்கீகாரத்தை கட்சிகள் வழங்க வேண்டும் – மானஷ் மகீன்

மார்ச் 8, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
imunify-bot-check
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?