இந்த ஆண்டு இதுவரை நாட்டில் பதிவான டெங்கு நோயாளிகளின் எண்ணிக்கை 50,000ஐ கடந்துள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவு தெரிவித்துள்ளது.
சமூக வைத்தியர் பிரஷிலா சமரவீரா தெரிவிக்கையில், இதுவரை 50,459 டெங்கு நோயாளிகளும், 30 இறப்புகளும் பதிவாகியுள்ளன.
நுளம்புகளின் அடர்த்தி இன்னும் குறையாத நிலையில், டெங்கு பரவல் மேலும் அதிகரிக்கும் அபாயம் இருப்பதாக அவர் எச்சரித்துள்ளார். குறிப்பாக நீண்ட வார இறுதி நாட்களில் பொதுமக்கள் வீடுகள் மற்றும் சுற்றுப்புறங்களை சுத்தமாக பராமரிக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
மேலும், இரண்டு நாட்களுக்கு மேல் காய்ச்சல் நீடித்தால் உடனடியாக தகுதிவாய்ந்த வைத்தியரை அணுகி தேவையான பரிசோதனைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. டெங்கு உறுதிப்படுத்தப்படும் வரை பெரசிட்டமோல் வகை மருந்துகளை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.


