யாழ்ப்பாண மாவட்டத்தை சேர்ந்த காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களுடனான கலந்துரையாடல் நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் ஹர்ஷன நானாயக்காரவின் தலைமையில் நேற்றைய தினம் சனிக்கிழமை மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
தேசிய நல்லிணக்கம் மற்றும் காணாமல் போன ஆட்கள் பற்றிய அலுவலகம் முன்னெடுத்துள்ள நடவடிக்கை தொடர்பில் தெளிவூட்டும் முகமாக இக் கலந்துரையாடல் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இக் கலந்துரையாடலில் காணாமல் போனவர்களின் உறவினர்கள் மற்றும் சமூகமட்ட அமைப்புகள் சார்பில் கலந்து கொண்டிருந்தவர்களிடம் பிரச்சினைகள் தொடர்பாக அமைச்சர் கேட்டறிந்து கொண்டார்.
குறித்த கலந்துரையாடலில் கடற்தொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் , பாராளுமன்ற உறுப்பினர்களான கருணநாதன் இளங்குமரன், ச.ஸ்ரீபவானந்தராஜா, நீதி அமைச்சின் மேலதிக செயலாளர் ,காணாமல் ஆக்கப்பட்டோர் அலுவலகத்தின் தலைவர், காணாமல் போன ஆட்கள் பற்றிய அலுவலகத்தின் உத்தியோகத்தர்கள், காணாமல் போனவர்களின் உறவினர்கள், பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள், அரச சார்பற்ற நிறுவன பிரதிநிதிகள் எனப் பலர் கலந்துக் கொண்டனர்.


