கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவில் நீண்டகாலமாக தீர்க்கப்படாமல் நிலவி வந்த காணிப்பிணக்குகளைத் தீர்ப்பதற்கான காணி நடமாடும் சேவை இன்றைய தினம் (12.06.2026) பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.
இந் நடமாடும் சேவையில் மாவட்ட அரசாங்கதிபர் எஸ்.முரளிதரன், வடமாகாணக் காணி ஆணையாளர் இ.குருபரன் கிளிநொச்சி மாவட்டச் செயலக மேலதிக அரசாங்க அதிபர் (காணி) அஜிதா பிரதீபன், கண்டாவளை பிரதேச செயலாளர் த.பிருந்தாகரன், வடமாகாணக் உதவி காணி ஆணையாளர் விதுசா தினேஸ் , மாகாணக் காணி ஆணையாளர் திணைக்கள அலுவலர்கள் மற்றும் பிரதேச செயலக அலுவலர்கள் உள்ளிட்டோர். கலந்து கொண்டு மக்களின் பிரச்சினைகளை நேரடியாகக் கேட்டறிந்தனர்.
இதன்போது நீண்டகாலமாக நிலுவையில் இருந்த பல காணிப்பிணக்குகள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டு, சம்பந்தப்பட்ட ஆவணங்கள் பரிசீலிக்கப்பட்டு உரிய தீர்வுகள் வழங்கப்பட்டன.
மக்களுக்கு தங்களது காணி உரிமைகள் தொடர்பான பிரச்சினைகளுக்கு துரிதமான மற்றும் நேரடி தீர்வுகளை வழங்குவதற்கான இத்தகைய சேவைகள் மாவட்ட மட்டத்தில் பிரதேச செயலர்பிரிவு ரீதியாக தொடர்ச்சியாக இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.


