Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
அண்மைய செய்திகள்இலங்கை

யாழில். தாக்குதலுக்கு இலக்காகி உயிரிழந்த இளைஞன்

ஏப்ரல் 13, 2026
படிக்க 2 நிமிடங்கள்
SHARE

யாழ்ப்பாணத்தில், நண்பன் மீது கூரிய ஆயுதங்களால் தாக்குதல் நடாத்தி விட்டு தப்பி செல்ல முற்பட்ட நபரை மடக்கி பிடிக்க முற்பட்ட இளைஞனை அந்நபர்கள் மூர்க்கத்தனமாக தாக்கியதில் உயிரிழந்துள்ளார்.

தொல்புரம், கொட்டடியம்பதி ஆதி முத்துமாரியம்மன் கோவிலடியை சேர்ந்த குகதீஸ்வரன் மயூரன் (வயது 27) என்ற இளைஞனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்

இரண்டு இளைஞர்களுக்கு இடையில் நீண்ட காலமாக முரண்பாடு நிலவி வந்துள்ளது. இந்நிலையில் ஒரு இளைஞன் கொட்டடியம்பதி ஆதி முத்துமாரியம்மன் கோவில் புனரமைப்பு பணிகளில் ஈடுபட்டிருந்த வேளை, மற்றைய இளைஞன் மேலும் இரண்டு இளைஞர்களுடன், ஆலயத்திற்கு வந்து இளைஞனுடன் முரண்பட்டு கூரிய ஆயுதங்களால் தாக்கி விட்டு, அவ்விடத்தில் இருந்து தப்பி செல்ல முற்பட்டுள்ளார்.

அதன் போது , தனது நண்பன் மீது தாக்குதலை மேற்கொண்டு விட்டு தப்பி செல்ல முற்பட்ட நபர்களை மடக்கி பிடிக்க முற்பட்ட வேளை, அவர்கள் தம்மை பிடிக்க முற்பட்ட இளைஞன் மீது சரமாரியாக தாக்கி விட்டு , அவ்விடத்தில் இருந்து தப்பி சென்றுள்ளனர்.

மடக்கி பிடிக்க முற்பட்ட வேளை தாக்குதலுக்கு இலக்கான இளைஞன் சம்பவ இடத்திலையே உயிரிழந்த நிலையில் , முன்னதாக தாக்குதலுக்கு இலக்கான இளைஞன் படுகாயமடைந்த நிலையில் ,வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அதேவேளை தாக்குதலை மேற்கொண்ட நபர்களில், இளைஞனுடன் முரண்பாட்டில் ஈடுபட்டு வந்த நபர் , இளைஞன் உயிரிழந்த விடயம் தெரியாது, தன்னை ஆலயத்தில் வைத்து இளைஞர்கள் குழு தாக்கி விட்டார்கள் என காயங்களுடன் வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்திற்கு சென்று முறைப்பாடு செய்துள்ளார்.

முறைப்பாட்டினை அடுத்து , இளைஞனை சிகிச்சைக்காக வைத்திய சாலையில் அனுமதித்து விட்டு , முறைப்பாடு தொடர்பாக பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்த வேளையே , முறைப்பாட்டாளர் உள்ளிட்ட மூவரின் தாக்குதலுக்கு இலக்காகி இளைஞன் ஒருவர் உயிரிழந்ததும் , மற்றுமொரு இளைஞன் படுகாயமடைந்ததும் பொலிஸாருக்கு தெரியவந்துள்ளது.

அதனை அடுத்து முறைப்பாடு செய்த பின்னர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வரும் இளைஞனுக்கு பொலிஸ் பாதுகாப்பு அளித்துள்ளனர் , சிகிச்சையின் பின்னர் இளைஞனை கைது செய்ய நடவடிக்கை எடுத்துள்ளனர்.

அத்துடன் குறித்த இளைஞனுடன் தாக்குதலுக்கு சென்ற மற்றைய இருவரும் தலைமறைவாகியுள்ள நிலையில் , அவர்களை கைது செய்ய நடவடிக்கை எடுத்துள்ள பொலிஸார் , மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

முந்தைய செய்தி வவுனியாவில் சுகாதார பரிசோதகரால் விசேட நடவடிக்கை
அடுத்த செய்தி செம்மணி மனிதப் புதைகுழி அகழ்வுக்காக நிதி விடுவிப்பு

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்இலங்கை

மட்டக்களப்பில் கைது செய்யப்பட்ட போலி சட்டத்தரணி

டிசம்பர் 8, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

மல்லெஹெவவில் விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர்!

ஜூலை 13, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

முல்லைத்தீவில் பெண்ணொருவரின் சடலம் மீட்பு

ஏப்ரல் 14, 2026
அண்மைய செய்திகள்இலங்கை

டிஜிட்டல் தேசிய பிறப்புச்சான்றிதழ் வழங்கி வைப்பு

ஆகஸ்ட் 4, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?