Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
அண்மைய செய்திகள்இலங்கை

பலாலி கிழக்கு முழுமையாக விடுவிக்கப்படும் – ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் உறுதியளிப்பு

மார்ச் 28, 2026
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

யாழ்ப்பாணம் பலாலி கிழக்கு பகுதியை முழுமையாக விடுவிக்கும் பணிகள் துரித கதியில் முன்னெடுக்கப்பட்டு வருவதாக மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாவட்ட செயலகத்தில் நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் கலந்துக் கொண்ட வலி. வடக்கை சேர்ந்த நபர் ஒருவர், கடந்த 36 வருடங்களுக்கு மேலாக நாங்கள் எங்கள் சொந்த இடங்களை விட்டு வெளியேறி வேறு இடங்களில் வசித்து வருகின்றோம்.

36 வருடங்களுக்கு மேலாகியும் எமது சொந்த இடங்களில் மீள் குடியேற முடியாத நிலைமையில் உள்ளோம். எனது பெற்றோர் இல்லாத காலத்தில் எனது காணிகளை அடையாளம் காட்ட யாரும் இருக்க போவதில்லை. அவர்களின் ஆசை கூட தமது சொந்த காணியில் இறுதி காலத்தை வாழ்வதே.

எனவே எமது காணிகளை எம்மிடமே மீள கையளியுங்கள். தொடர்ந்தும் எம்மை ஏமாற்றி வந்தால், நாம் போராடி தான் எமது காணிகளை பெற வேண்டிய சூழல் உருவாகும் என தெரிவித்தார்.

அதற்கு பதில் அளிக்கும் வகையில், பலாலி கிழக்கு பகுதியில் பெருமளவான பகுதிகள் இராணுவத்தினரால் விடுக்கப்பட்டுள்ளது. இன்னும் சில பகுதிகள் மாத்திரமே இராணுவ கட்டுப்பாட்டில் உள்ளது. அதனையும் விரைவில் விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது. அதனூடாக பலாலி கிழக்கு முழுவதும் கையளிக்கப்பட்டு விடும் என தெரிவிக்கப்பட்டது.

வசாவிளான் பகுதியில் இராணுவ கட்டுப்பாட்டில் உள்ள தனியார் காணியில் இராணுவ வைத்தியசாலைக்கான கட்டடம் எவ்வித அனுமதிகளும் இன்றி கட்டப்பட்டு வருகிறது. அதனை உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும் என கூட்டத்தில் கோரிக்கை வைக்கப்பட்டது.

அதன் அடிப்படையில் இராணுவத்தினரின் கட்டுமான பணிகளை உடன் நிறுத்த பணிப்பதாக ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.

முந்தைய செய்தி தையிட்டி விகாரை காணியை விடுவிக்கும் பணிகள் 80 வீதம் பூர்த்தி
அடுத்த செய்தி யாழில். மோட்டார் சைக்கிள் மோதியதில் ஒருவர் உயிரிழப்பு

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
வியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனி

எம்மவர் நிகழ்வுகள்

அமர்க்களம் 2026

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்இலங்கை

தமிழக மீனவர்களை கைது செய்தது இலங்கை கடற்படை!

ஜூலை 13, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

யாழில் பொன்.சிவகுமாரனின் திருவுருவ சிலைக்கு மலர் மாலை அணிவித்து அஞ்சலி

ஜூன் 5, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

நயினாதீவு – குறிகட்டுவான் படகு சேவைக்கான கட்டணம் அதிகரிப்பு

மார்ச் 31, 2026
இலங்கைகனடா

பிரதான செய்திகள்(video)

ஜூலை 27, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?